உ.பி. மாநிலத்தின் தலைநகர் லக்னோவில் கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு


உ.பி. மாநிலத்தின் தலைநகர் லக்னோவில் கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு
x
தினத்தந்தி 5 Jan 2023 4:45 AM IST (Updated: 5 Jan 2023 4:45 AM IST)
t-max-icont-min-icon

சீனா உள்ளிட்ட பல நாடுகளில் கொரோனா தொற்று பரவல் மீண்டும் எழுச்சி பெற்றுள்ளது.

லக்னோ

சீனா உள்ளிட்ட பல நாடுகளில் கொரோனா தொற்று பரவல் மீண்டும் எழுச்சி பெற்றுள்ளது. இதனால் நமது நாட்டில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடுவதில் கூடுதல் கவனம் செலுத்துமாறு மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.ஆனால் உத்தரபிரதேச மாநிலத்தின் தலைநகரான லக்னோவில் 4 அரசு கொரோனா தடுப்பூசி மையங்களில் தடுப்பூசி இருப்பு இல்லை என தெரிய வந்துள்ளது.இதன்காரணமாக அங்கு மக்கள் கொரோனாவுக்கு எதிரான 'பூஸ்டர் டோஸ்' தடுப்பூசி போடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இது பற்றி மூத்த அதிகாரி ஒருவர் கருத்து தெரிவிக்கையில், "இங்கு அடுத்த வாரம் புதிதாக கொரோனா தடுப்பூசிகள் நிறைய வரும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் எதிர்பார்க்கின்றனர்" என தெரிவித்தார். லக்னோவில் உள்ள எஸ்.பி.எம். சிவில் ஆஸ்பத்திரி, லோக்பந்து ஆஸ்பத்திரி, பலராம்பூர் ஆஸ்பத்திரி, என்.கே. ரோடு சமூக சுகாதார மையம் ஆகிய 4 தடுப்பூசி மையங்களிலும் கடந்த திங்கட்கிழமை முதல் தடுப்பூசிகள் இருப்பு இல்லை என்று மாவட்ட தடுப்பூசி திட்ட அதிகாரி எம்.கே.சிங் தெரிவித்தார். இதையடுத்து தடுப்பூசி வினியோகத்துக்கு நடவடிக்கை எடுக்கப்படுவதாக துணை முதல்-மந்திரி பிரஜேஷ் பதக் தெரிவித்தார்.


Next Story