சாலை பள்ளங்களை சீரமைக்க கோரி கடை உரிமையாளர்கள் போராட்டம்


சாலை பள்ளங்களை சீரமைக்க கோரி கடை உரிமையாளர்கள் போராட்டம்
x

மூடிகெரே அருகே தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்டுள்ள சாலை பள்ளங்களை சீரமைக்க கோரி கடை உரிமையாளர்கள் போராட்டம் நடத்தினர்.

சிக்கமகளூரு;


சிக்கமகளூரு மாவட்டம் மூடிகெரே தாலுகாவில் பெய்து வரும் கனமழையால், மூடிகெரே அருகே செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் மழைநீர் தேங்கி உள்ளது. அந்த சாலையில் ஏற்பட்டிருந்த பள்ளங்கள் தற்போது கூடுதலாக பெயர்ந்து உள்ளன. இதனால் அந்த சாலையை பயன்படுத்த முடியாமல் வாகன ஓட்டிகள் அவதி அடைகின்றனர்.

மேலும், அந்த பகுதியில் உள்ள மார்க்கெட்டிற்கு வரும் வாகனங்கள் குண்டும், குழியுமான சாலையை பயன்படுத்துவதால் சேதமடைகின்றன. இதுகுறித்து பஞ்சாயத்து அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எந்த பயனும் இல்லை என கூறப்படுகிறது.

இந்த நிலையில் மார்க்கெட் பகுதியை சேர்ந்த கடை உரிமையாளர்கள் கடைகளை அடைத்து போராட்டம் நடத்தினர். மேலும், அவர்கள் அந்த பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த சாலையில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

வாகனங்கள் வரிசையாக அணிவகுத்து நின்றன. அப்போது அவர்கள் சாலையில் உள்ள பள்ளங்களை சீரமைக்க வில்லை என்றால் மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என்று எச்சரித்தனர்.


Next Story