காங்கிரஸ் தலைவர் தேர்தல்: சசி தரூர் 30-ந்தேதி வேட்பு மனு தாக்கல்


காங்கிரஸ் தலைவர் தேர்தல்: சசி தரூர் 30-ந்தேதி வேட்பு மனு தாக்கல்
x

காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வேட்பு மனுவை 30-ந்தேதி சசி தரூர் தாக்கல் செய்வார் என்று தகவல் வெளியாகி உள்ளது.

புதுடெல்லி,

22 ஆண்டுகளுக்கு பிறகு காங்கிரஸ் கட்சி தலைவர் பதவிக்கு அடுத்த மாதம் 17-ந் தேதி தேர்தல் நடத்தப்படுகிறது.

இந்த தேர்தலில் சோனியா காந்தி குடும்பத்தினர் யாரும் போட்டியிட மாட்டார்கள் என்பது உறுதியாகி இருக்கிறது.

இதையடுத்து ராஜஸ்தான் முதல்-மந்திரி அசோக் கெலாட், காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியிடப்போவதாக அறிவித்துள்ளார்.

இப்போது தலைவர் பதவிக்கு காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய மந்திரி சசி தரூரும் போட்டியிடுவார் என்பது உறுதியாகி உள்ளது. அவரது சார்பில் அவரது உதவியாளர் ஆலிம் ஜாவேரி, டெல்லி காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் நேற்று வேட்பு மனு பெற்றுச் சென்றார். சசிதரூர், 30-ந் தேதி வேட்பு மனு தாக்கல் செய்வார் என அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன. அன்றுதான் வேட்பு மனு தாக்கலுக்கு கடைசி நாள் ஆகும்.

காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியிடுகிற ஒருவரின் வேட்புமனுவை 10 பிரதேச காங்கிரஸ் பிரதிநிதிகள் முன் மொழிய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story