மராட்டிய முதல் மந்திரி ஏக்நாத் ஷிண்டேவுக்கு சரத் பவர் திடீர் அறிவுரை


மராட்டிய முதல் மந்திரி ஏக்நாத் ஷிண்டேவுக்கு சரத் பவர் திடீர்  அறிவுரை
x

தசரா பொதுக்கூட்ட விவகாரத்தில் ஏக்நாத் ஷிண்டே மோதலை தவிா்க்க வேண்டும் என சரத்பவார் அறிவுறுத்தி உள்ளார்.

மும்பை,

சிவசேனா உத்தவ் தாக்கரே, ஏக்நாத் ஷிண்டே அணி 2 ஆக உடைந்து உள்ளது. 2 அணியினரும் தாதர் சிவாஜி பார்க்கில் தசரா பொது கூட்டம் நடத்த மும்பை மாநகராட்சியிடம் அனுமதி கேட்டு உள்ளனர். இது மராட்டிய அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.இந்தநிலையில் தசரா பொதுக்கூட்ட விவகாரத்தில் முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே மோதலை தவிர்க்க வேண்டும் என தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் அறிவுறுத்தி உள்ளார்.இதுகுறித்து அவர் கூறுகையில், " முதல்-மந்திரி மோதலை தவிர்க்க வேண்டும். எல்லோரையும் அரவணைத்து செல்ல வேண்டும்" என்றார்.

சரத்பவாரின் பேச்சு குறித்து ஏக்நாத் ஷிண்டே அணி செய்தி தொடர்பாளர் நரேஷ் மாஸ்கே கூறுகையில், "உத்தவ் தாக்கரே அரசு மத்திய மந்திரி நாராயண் ரானேயை அவர் சாப்பிட்டு கொண்டு இருக்கும்போது கைது செய்தது?. அப்போது சரத்பவார் மோதலை தவிர்க்குமாறு உத்தவ் தாக்கரேக்கு அறிவுரை கூறினாரா?. இளவரசர் (ஆதித்ய தாக்கரே) ஏக்நாத் ஷிண்டேக்கு எதிராக பேசிய போது, அவரை அவ்வாறு பேசக்கூடாது என சரத்பவார் கூறினாரா? " என்றார்.


Next Story