இந்திய அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபாலின் பதவிக்காலம் நீட்டிப்பு
இந்திய அட்டர்னி ஜெனரலாக தொடர மத்திய அரசு கோரிக்கை விடுத்த நிலையில், மூத்த வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால் சம்மதம் தெரிவித்து உள்ளாா்.
புதுடெல்லி,
இந்திய அட்டர்னி ஜெனரலாக மூத்த வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால், கடந்த 2017-ம் ஆண்டு ஜூலை மாதம் முதல் இருந்து வருகிறாா். இவரது பதவிக்காலம் நாளையுடன் (ஜூன் 30) முடிவடைகிறது.
இந்த நிலையில், இந்திய அட்டர்னி ஜெனரலாக தொடர மத்திய அரசு கே.கே.வேணுகோபாலிடம் கோரிக்கை விடுத்தது. இதனையடுத்து அவா் மேலும் சில மாதங்கள் இந்திய அட்டர்னி ஜெனரலாக நீடிக்க ஒப்புக்கொண்டார்.
இவா் இன்னும் 3 மாதங்கள் அட்டர்னி ஜெனரலாக தொடர்வாா் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே இவரது பதவிக்காலம் ஓராண்டு நீட்டிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story