ராஜ்தாக்கரேவுடன் பேசிய சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏக்கள்?


ராஜ்தாக்கரேவுடன் பேசிய சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏக்கள்?
x

2006-ம் ஆண்டு உத்தவ் தாக்கரேவுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, சிவசேனாவிலிருந்து விலகி ராஜ் தாக்கரே தனிக்கட்சி ஆரம்பித்தார்.

மும்பை,

சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏக்கள் அசாமில் முகாமிட்டுள்ளனர். ஏக்னாத் ஷிண்டே தலைமையில் முகாமிட்டு இருக்கும் அதிருப்தி எம்.எல்.ஏக்களின் அடுத்த கட்ட நகர்வு மராட்டிய அரசியலில் உன்னிப்பாக கவனிக்கப்படுகிறது. இந்த நிலையில், ஏக்நாத் ஷிண்டே மராட்டிய நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரேவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார்.

ராஜ் தாக்கரே அறுவை சிகிச்சைக்குப் பிறகு நேற்று மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில், அவருடன் ஏக்னாத் ஷிண்டே பேசியிருக்கிறார். ஆரம்பத்தில் உடல் நலம் குறித்து விசாரித்த ஏக்நாத் ஷிண்டே, அடுத்து மராட்டிய அரசியல் நிலவரம் குறித்து ஆலோசனை நடத்தியதாகக் கூறப்படுகிறது. தொடர்ச்சியாக இரண்டு முறை ராஜ் தாக்கரேவுடன் ஏக்நாத் ஷிண்டே ஆலோசனை நடத்தியிருக்கிறார்.

2006-ம் ஆண்டு உத்தவ் தாக்கரேவுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, சிவசேனாவிலிருந்து விலகி ராஜ் தாக்கரே தனிக்கட்சி ஆரம்பித்தார். சமீபகாலமாக பா.ஜ.க-வுடன் இணைந்து ராஜ் தாக்கரே செயல்பட ஆரம்பித்திருக்கிறார். தீவிர இந்துத்துவா கொள்கைக்கு ஆதரவாக ராஜ்தாக்கரே குரல் கொடுத்து வருகிறார்.


Next Story