லைவ் அப்டேட்ஸ்: குஜராத் தேர்தல் - வாக்குப்பதிவு நிறைவு


லைவ் அப்டேட்ஸ்: குஜராத் தேர்தல் - வாக்குப்பதிவு நிறைவு
x
தினத்தந்தி 5 Dec 2022 8:06 AM IST (Updated: 5 Dec 2022 6:41 PM IST)
t-max-icont-min-icon

குஜராத் சட்டப்பேரவைக்கு 2-வது மற்றும் இறுதி கட்ட வாக்குப்பதிவு 93- தொகுதிகளில் நடைபெற்றது.

அகமதாபாத்,

நாடு முழுவதும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள குஜராத் மாநில தேர்தல் திருவிழா இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. அங்குள்ள 182 சட்டசபை தொகுதிகளில் முதற்கட்டமாக 89 இடங்களுக்கு கடந்த 1-ந்தேதி தேர்தல் நடந்து முடிந்தது. 2-வது மற்றும் இறுதிக்கட்டமாக மீதமுள்ள 93 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெற்றது. காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணி வரை நடைபெற்றது.

Live Updates

  • 5 Dec 2022 10:07 AM IST

    ஜனநாயக திருவிழா குஜராத் மற்றும் இமாசல பிரதேசம், டெல்லி வாக்காளர்களால் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாட்டு மக்களுக்கு நான் நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன். தேர்தலை அமைதியான முறையில் நடத்த்தி வரும் தேர்தல் ஆணையத்திற்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்- பிரதமர் மோடி

  • 5 Dec 2022 9:09 AM IST

    குஜராத்தில் இன்று இரண்டாவது கட்டமாக 93- சட்டமன்ற தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. குஜரத்தின் புதிய நம்பிக்கை மாற்றும் இலக்குகளுக்கான தேர்தல் இதுவாகும். பல தசாப்தங்களுக்கு பிறகு வந்துள்ள மிகப்பெரிய வாய்ப்பு வந்துள்ளது. எதிர்காலத்தை கருத்தில் கொண்டு குஜராத்தின் வளர்ச்சிக்காக வாக்களியுங்கள்- அரவிந்த் கெஜ்ரிவால் டுவிட்

  • 5 மாநிலங்களில் உள்ள 6 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்: வாக்குப்பதிவு தொடங்கியது
    5 Dec 2022 8:24 AM IST

    5 மாநிலங்களில் உள்ள 6 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்: வாக்குப்பதிவு தொடங்கியது

    புதுடெல்லி,

    குஜராத் சட்டமன்ற தேர்தலுக்கு எஞ்சிய 93 தொகுதிகளில் இன்று இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெற்று வருகிறது. அதேபோல், ஐந்து மாநிலங்களில் காலியாக உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. உத்தர பிரதேசத்தில் உள்ள மணிப்பூரி நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று இடைத்தேர்தல் நடைபெற்று வருகிறது. இடைத்தேர்தல் நடைபெறும் உத்தர பிரதேசம், ஒடிசா, சத்தீஷ்கர் ராஜஸ்தான், பீகார் ஆகிய ஐந்து மாநிலங்களிலும் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யபப்ட்டுள்ளன.

  • 5 Dec 2022 8:17 AM IST

    குஜராத் தேர்தலில் வாக்காளர்கள் பெருமளவில் வந்து தங்கள் ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும் என்று பிரதமர் மோடி தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். குறிப்பாக பெண்கள், இளைஞர்கள் தங்கள் வாக்கினை பதிவு செய்ய தவறக்கூடாது எனவும் வாக்காளர்களுக்கு வேண்டு கோள் விடுத்துள்ள பிரதமர் மோடி, அகமதாபாத்தில் உள்ள வாக்குச்சாவடியில் காலை 9 மணிக்கு வாக்களிக்க இருக்கிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.


Next Story