குரங்கம்மை தொற்று தொடர்பாக மாநிலங்களுக்கு மத்திய சுகாதாரத்துறை புதிய எச்சரிக்கை


குரங்கம்மை தொற்று  தொடர்பாக மாநிலங்களுக்கு மத்திய சுகாதாரத்துறை  புதிய எச்சரிக்கை
x
தினத்தந்தி 14 July 2022 4:43 PM IST (Updated: 14 July 2022 5:25 PM IST)
t-max-icont-min-icon

குரங்கம்மை தொற்று தொடர்பாக மாநிலங்களுக்கு மத்திய சுகாதாரத்துறை புதிய ஆலோசனைகளை வழங்கி உள்ளது.

புதுடெல்லி

குரங்கம்மை அறிகுறிகளுடன் ஒருவர் சிகிச்சை பெற்று வருவதாக மாநில சுகாதாரத்துறை மந்திரி வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து கேரளா வந்த நபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

அவரிடமிருந்து எடுக்கப்பட்ட மாதிரிகள் புனேவில் உள்ள தேசிய வைரலாஜி மையத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. முடிவுகள் வந்த பிறகே அவருக்கு குரங்கம்மை பாதிப்பு உள்ளதா என தெரியவரும் என கேரள மந்திரி வீணா ஜார்ஜ் கூறினார்.

இந்த நிலையில் குரங்கு அம்மை நோய் குறித்து மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷண், அனைத்து மாநில சுகாதாரத் துறை செயலாளருக்கு கடிதம் எழுதி உள்ளார். நோய் குறித்து பரிசோதனை செய்யும் குழுக்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என அறிவுறுத்தி உள்ளார்.

மேலும் அதில் கூறி இருப்பதாவது:-

பொது அறிகுறிகள் மற்றும் அறிகுறிகளைப் பற்றி மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்கள், நோய் கண்காணிப்பு குழுக்கள், உள்ளிட்ட அனைத்து முக்கிய பங்குதாரர்களின் கண்காணிப்பு உள்ளிட்ட முக்கிய நடவடிக்கைகளை எடுக்குமாறு சுகாதார செயலாளர் அனைத்து மாநிலங்களையும் யூனியன் பிரதேசங்களையும் கேட்டுக் கொண்டார்.

ஜூலை 13 தரவுகளின்படி உலகம் முழுவதும் குரங்கம்மை தொற்று10,400-ஐத் தாண்டி உள்ளது சுமார் 60 நாடுகளில் இந்த வைரஸ் நோய் பரவி உள்ளது.



Next Story