வெப்ப அலையால் சுருண்டு விழுந்த பள்ளி மாணவ, மாணவியர்கள்; பீகாரில் அதிர்ச்சி - வைரலாகும் வீடியோ


வெப்ப அலையால் சுருண்டு விழுந்த பள்ளி மாணவ, மாணவியர்கள்; பீகாரில் அதிர்ச்சி - வைரலாகும் வீடியோ
x

வெப்ப அலையால் மயக்கமடைந்த மாணவர்களை ஆசிரியர்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர்.

பாட்னா,

இந்தியாவின் மேற்கு மற்றும் வடக்கு பகுதிகளில் கடுமையான வெப்பம் நிலவி வருகிறது. மக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாத அளவிற்கு வெப்ப அலை வீசுகிறது. டெல்லி, உ.பி., பீகார் போன்ற மாநிலங்களில் 45 டிகிரி செல்சியசை தாண்டி வெயில் கொளுத்துகிறது. இதனால் வெப்ப காற்று வீசுகிறது. அதனால் பகல் நேரங்களில் வெளியே வரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் பீகார் மாநிலம், ஷேக்பூராவில் உள்ள பள்ளி ஒன்றில் வெப்ப அலையின் தாக்கம் தாங்க முடியாமல் பள்ளி மாணவ, மாணவியர்கள் அடுத்தடுத்து மயக்கம் அடைந்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. மாணவிகளுக்கு தண்ணீர் வழங்கி முதலுதவி வழங்கப்பட்டு உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இது தொடர்பாக சதார் மருத்துவமனை மருத்துவர் ரஜினிகாந்த் குமார் கூறுகையில், "வெப்பம் அதிகரித்து வருவதால், மாணவ, மாணவிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். இங்கு அனுமதிக்கப்பட்ட மாணவர்கள் தற்போது நலமாக உள்ளனர். மாணவர்கள் எப்போதும் நீர்ச் சத்துடன் இருக்க வேண்டும். அவர்களால் முடிந்த அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். வெப்பத்தில் இருந்து வெளியே வராமல் இருக்க வேண்டும். எங்கு சென்றாலும் மாணவர்கள் அனைவரும் தண்ணீர் பாட்டில்களை எடுத்துச் செல்ல வேண்டும்" என்றார்.


Next Story