பா.ஜனதா மராட்டியத்தை 3 ஆக உடைக்க விரும்புகிறது- சஞ்சய் ராவத் விமர்சனம்
பா.ஜனதா மராட்டியத்தை 3 ஆக உடைக்க விரும்புகிறது என்று சஞ்செய் ராவத் விமர்சித்துள்ளார்.
மும்பை,
சிவசேனாவை சேர்ந்த 12 எம்.பி.க்கள் ஏக்நாத் ஷிண்டே அணிக்கு தாவினர். முன்னதாக இதுகுறித்து சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் கூறுகையில், " யார் சென்றாலும், அது உண்மையான சிவசேனாவுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. சிவசேனாவை கட்டாயம் உடைக்க வேண்டும் என்பதற்காக எம்.பி.,எம்.எல்.ஏ.க்கள் வீடுகளுக்கு பாதுகாப்பு அளிக்கப்படுகிறது.
நாளை அவர்கள் மாதோஸ்ரீக்கு கூட உரிமை கோருவார்கள். பா.ஜனதா மராட்டியத்தை 3 ஆக உடைக்க விரும்புகிறது. ஆனால் நாங்கள் அதற்கு அனுமதிக்க மாட்டோம். மாநிலம் மழை வெள்ளத்தில் மிதக்கும் நிலையில், ஏக்நாத் ஷிண்டே ஆட்சியை காப்பாற்ற டெல்லியில் உள்ளார். உண்மையில் அவர் சிவசேனா முதல்-மந்திரி அல்ல. பா.ஜனதா முதல்-மந்திரி. " என்றார்.
Related Tags :
Next Story