பிரதிஷ்டை தின சிறப்பு பூஜைக்காக சபரிமலையில் நடை திறக்கப்பட்டது
சபரிமலை ஐயப்பன் கோவில் பிரதிஷ்டை தின பூஜைகளை முன்னிட்டு இன்று மாலை நடை திறக்கப்பட்டது.
திருவனந்தபுரம்,
ஆனி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை வருகிற 14-ந் தேதி திறக்கப்படுகிறது. முன்னதாக பிரதிஷ்டை தினத்தை முன்னிட்டு இன்று (புதன்கிழமை) மாலை 5.30 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. நாளை (வியாழக்கிழமை) பிரதிஷ்டை தின சிறப்பு வழிபாடு, பூஜைகள் தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு தலைமையில் நடைபெறும்.
அதனை தொடர்ந்து இரவு 10.30 மணிக்கு நடை அடைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். ஐயப்ப பக்தர்களின் வசதிக்காக நிலக்கல் பகுதியில் உடனடி தரிசன முன்பதிவு வசதி செய்யப்பட்டு உள்ளது. தரிசனத்திற்கு வரும் ஐயப்ப பக்தர்கள் கண்டிப்பாக முக கவசம் அணிந்து வர திருவிதாங்கூர் தேவஸ்தானம் சார்பில் வேண்டுகோள் விடப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story