ஆவணி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று மாலை திறப்பு...!


ஆவணி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று மாலை திறப்பு...!
x

ஆவணி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவிலில், இன்று மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படுகிறது.

திருவனந்தபுரம்,

சபரிமலை ஐயப்பன் கோவில் நடை மாதாந்திர பூஜைக்காக ஒவ்வொரு தமிழ் மாதமும் முதல் 5 நாட்கள் திறக்கப்படும். அப்போது பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். அதன்படி ஆவணி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று (16-ம் தேதி) மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது.

சபரிமலை தந்திரி கண்டரரு ராஜீவரு முன்னிலையில் மேல்சாந்தி ஜெயராமன் நம்பூதிரி கோவில் நடையை திறக்கிறார். இன்று வேறு எந்த பூஜைகளும் நடைபெறாது. நாளை 17-ம் தேதி முதல் 21-ம் தேதி வரை தினமும் கணபதி ஹோமம், உஷ பூஜை, புஷ்பாபிஷேகம் உள்ளிட்ட வழக்கமான பூஜைகள் நடைபெறும்.

அது மட்டுமின்றி படி பூஜை, உதயாஸ்தமய பூஜை உள்ளிட்ட சிறப்பு பூஜைகளும் நடைபெறுகின்றன. மேலும் இந்த 5 நாட்களும் நெய் அபிஷேகமும் நடைபெறும். கோவில் நடை திறந்திருக்கும் 5 நாட்களும் ஆன்லைனில் முன்பதிவு செய்த பக்தர்களே சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர்.

இதனால் நிலக்கல் மற்றும் பம்பையில் உடனடி ஆன்லைன் முன்பதிவு மையங்களும் நிறுவப்படுகின்றன. மாதாந்திர பூஜை முடிவடைந்து வருகிற 21-ம் தேதி இரவு 10 மணிக்கு கோவில் நடை சாத்தப்படுகிறது.


Next Story