ரூ.5 லட்சம் சந்தன மரக்கட்டைகள் பறிமுதல்; 5 பேர் கைது


ரூ.5 லட்சம் சந்தன மரக்கட்டைகள் பறிமுதல்; 5 பேர் கைது
x
தினத்தந்தி 17 Sept 2022 12:15 AM IST (Updated: 17 Sept 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

மூடிகெரேயில் ரூ.5 லட்சம் மதிப்பிலான சந்தன மரக்கட்டைகளை கடத்திய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

சிக்கமகளூரு;


சிக்கமகளூரு மாவட்டம் மூடிகெரே தாலுகா கோணிபீடு வனப்பகுதியில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு மர்மநபர்கள் 54 சந்தன மரங்களை வெட்டி கடத்தி இருந்தனர். இதன் மொத்த மதிப்பு ரூ.5 லட்சம் இருக்கும்.

இதுகுறித்து மூடிகெரே வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் சந்தனமரங்களை வெட்டி கடத்திய மர்ம நபர்களை வலைவீசி தேடிவந்தனர். இந்த நிலையில் கோணிபீடு வனப்பகுதியில் சந்தனமரங்களை வெட்டி கடத்திய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

விசாரணையில் அவர்கள் மூடிகெரே அருகே உள்ள பிலகுலா பகுதியை சேர்ந்த கிருஷ்ணன்(வயது 34), கார்த்திக்(28), ஹரிஷ்(28), சுவாமி(23), அக்னி(29) ஆகியோர் என்பது தெரியவந்தது. அவர்களிடம் இருந்து ரூ.5 லட்சம் மதிப்புள்ள 54 சந்தன மரக்கட்டைகளும் மீட்கப்பட்டது. கைதான 5 பேரிடமும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story