அன்னிய செலாவணி சட்டத்தை மீறிய சர்வதேச அமைப்புக்கு ரூ.51 கோடி அபராத நோட்டீஸ் அமலாக்கத்துறை நடவடிக்கை
வெளிநாட்டு நன்கொடை ஒழுங்குமுறை சட்டத்தை மீறி, பதிவு செய்யப்படாத தனது இந்திய அமைப்புகளுக்கு பெருமளவு நன்கொடையை அனுப்பி வந்துள்ளது.
புதுடெல்லி,
சர்வதேச மனித உரிமை அமைப்பான ஆம்னஸ்டி இன்டர்நேஷனலின் இந்திய பிரிவான ஆம்னஸ்டி இந்தியா இன்டர்நேஷனல் அமைப்புக்கு ரூ.51 கோடியே 72 லட்சம் அபராதம் விதிப்பதற்கு அமலாக்கத்துறை நோட்டீஸ் விடுத்துள்ளது. அந்த அமைப்பின் முன்னாள் தலைமை செயல் அதிகாரி ஆகர் படேலுக்கு ரூ.10 கோடி அபராதத்துக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இங்கிலாந்தில் உள்ள ஆம்னஸ்டி இன்டர்நேஷனல், வெளிநாட்டு நன்கொடை ஒழுங்குமுறை சட்டத்தை மீறி, பதிவு செய்யப்படாத தனது இந்திய அமைப்புகளுக்கு பெருமளவு நன்கொடையை அனுப்பி வந்துள்ளது.
இது, அன்னிய செலாவணி மேலாண்மை சட்ட விதிமுறைகளை மீறிய செயல் என்பதால், அபராதம் விதிப்பதற்கு விளக்கம் கேட்டு அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
Related Tags :
Next Story