பெங்களூருவில் 1 லட்சம் வீடுகள் கட்டும் திட்டத்தில் பயனாளிகளுக்கு, வங்கி கடன் உத்தரவாதம் வழங்க ரூ.500 கோடி


பெங்களூருவில் 1 லட்சம் வீடுகள் கட்டும் திட்டத்தில்  பயனாளிகளுக்கு, வங்கி கடன் உத்தரவாதம் வழங்க ரூ.500 கோடி
x

பெங்களூருவில் 1 லட்சம் வீடுகள் கட்டும் திட்டத்தில் பயனாளிகளுக்கு வங்கி கடன் உத்தரவாதம் வழங்க ரூ.500 கோடி ஒதுக்கப்படும் என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை அறிவித்துள்ளார்.

பெங்களூரு: பெங்களூருவில் 1 லட்சம் வீடுகள் கட்டும் திட்டத்தில் பயனாளிகளுக்கு வங்கி கடன் உத்தரவாதம் வழங்க ரூ.500 கோடி ஒதுக்கப்படும் என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை அறிவித்துள்ளார்.

தொழில் நிறுவனங்கள்

கர்நாடக அரசின் வீட்டு வசதித்துறை மற்றும் குடிசை மாற்று வாரியம் சார்பில் ராஜராஜேஸ்வரிநகர் தொகுதியில் ஏழை மக்களுக்கு 1,588 வீடுகளை கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடம் கட்டும் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கலந்து கொண்டு அந்த திட்டத்திற்கு அடிக்கல் நாட்டி பேசியதாவது:-

பெங்களூரு வேகமாக வளர்ந்து வருகிறது. இதன் எல்லையும் விரிந்து கொண்டு செல்கிறது. புதிய புதிய தொழில் நிறுவனங்கள் பெங்களூருவுக்கு வருகின்றன. தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் குவிந்து கிடக்கின்றன. பெங்களூருவை உலகமே உற்று நோக்குகிறது. கர்நாடகம் மட்டுமின்றி நாட்டின் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த மக்கள் வேலை தேடி பெங்களூருவுக்கு வந்துள்ளனர். அவர்கள் வீடு உள்ளிட்ட வசதிகள் இன்றி தவிக்கிறார்கள்.

52 ஆயிரம் வீடுகள்

அத்தகைய மக்களுக்கு வீடுகள் கட்டி கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தான் இந்த அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடத்தை கட்டுகிறோம். இன்னொருபுறம் பெங்களூருவில் உள்ள ஏரிகளை பாதுகாக்க வேண்டும். அதன் அடிப்படையில் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. பெங்களூருவில் ஏழை மக்களுக்கு 1 லட்சம் வீடுகளை கட்டி கொடுக்கும் திட்டத்தை தொடங்கினோம். அதில் இதுவரை 52 ஆயிரம் வீடுகளை கட்டி முடித்துள்ளோம்.வீடுகள் கட்டி முடிக்கப்பட்டாலும் பயனாளிகளுக்கு வங்கிகள் கடன் வழங்க முன்வராததால் அந்த வீடுகள் ஒதுக்கப்படாமல் உள்ளன.

இதையடுத்து பயனாளிகளுக்கு வங்கி கடனுக்கு உத்தரவாதம் அளிக்கும் வகையில் அரசு ரூ.500 கோடி நிதி ஒதுக்கீடு செய்யும். ஆதிதிராவிடர்களுக்கு வீட்டு மானியம் ரூ.2 லட்சம் வழங்கப்படும். ஏழை மக்களின் முன்னேற்றத்திற்காக நாங்கள் திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறோம்.

இவ்வாறு பசவராஜ் பொம்மை பேசினார்.


Next Story