திருமணமாகி 2 மாதத்திற்குள் மனைவியின் வங்கி கணக்கில் ரூ.5½ லட்சம் திருட்டு - சாப்ட்வேர் என்ஜினீயருக்கு வலைவீச்சு


திருமணமாகி 2 மாதத்திற்குள் மனைவியின் வங்கி கணக்கில் ரூ.5½ லட்சம் திருட்டு - சாப்ட்வேர் என்ஜினீயருக்கு வலைவீச்சு
x

கோப்புப்படம்

பல பெண்களை திருமணம் செய்து கொள்வதாக கூறி பணம் பெற்று மோசடியில் ஈடுபட்ட சாப்ட்வேர் என்ஜினீயரை போலீசார் தேடி வருகின்றனர்.

பெங்களூரு,

பெங்களூரு வித்யாரண்யபுரா பகுதியில் 29 வயது இளம்பெண் வசித்து வருகிறார். அவருக்கும், சாப்ட்வேர் என்ஜினீயரான சேத்தன் என்பவருக்கும் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. திருமணத்துக்கு முன்பு பல்வேறு காரணங்களை கூறி சேத்தன், இளம்பெண்ணிடம் ரூ.5½ லட்சம் வரை கடனாக பெற்றுள்ளார்.

திருமணமான நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சேத்தன் வீட்டை விட்டு வெளியேறினார். இதற்கிடையே அந்த பெண் தனது வங்கி கணக்கை ஆய்வு செய்தபோது, அதில் இருந்து ரூ.5½ லட்சம் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டு செயலிக்கு பரிமாற்றம் செய்யப்பட்டு இருந்தது தெரியவந்தது.

அப்போது தான் தனது கணவர், தனக்கு தெரியாமல், வங்கி கணக்கில் இருந்து பணத்தை திருடியது தெரியவந்தது. இதையடுத்து அவர் உடனடியாக கொடிகேஹள்ளி போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

முதற்கட்ட விசாரணையில், சேத்தன் இதேபோல் பல பெண்களை திருமணம் செய்து கொள்வதாக கூறி பணம் பெற்று மோசடியில் ஈடுபட்டதும், மேலும் சிலரிடம் வேலை வாங்கி தருவதாக கூறி பணமோசடி செய்ததும் தெரிந்தது. இதுகுறித்தும் போலீசார் வழக்குப்பதிவு செய்து சேத்தனை வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story