உத்தரகாண்டில் சாலை விபத்து; 5 பேர் பலி


உத்தரகாண்டில் சாலை விபத்து; 5 பேர் பலி
x

உத்தரகாண்டில் விபத்தில் சிக்கிய காரில் பயணித்த 5 பேர் காயமடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர்.

நைனிடால்,

உத்தரகாண்டின் நைனிடால் நகரில் ஓகால்கண்டா கிராமத்தில் கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது, அந்த கார் திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து ஓடியது. இதில், சாலையோரத்தில் இருந்த பள்ளம் ஒன்றில் கார் கவிழ்ந்தது.

இந்த சம்பவத்தில் காரில் இருந்தவர்கள் அலறி, கூச்சல் போட்டனர். இந்த சம்பவம் பற்றி அறிந்ததும் போலீசார் அந்த பகுதிக்கு சென்றனர்.

எனினும், காரில் இருந்த 5 பேர் உயிரிழந்தனர். இதுதவிர, காரில் பயணித்த 5 பேர் காயமடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story