உயிரை பணயம் வைத்து... நட்புன்னா என்னவென்று தெரிஞ்சுக்கோங்க..!! வைரலான வீடியோ
இதனை பார்த்து உணர்ச்சிவசப்பட்டு விட்டேன். அடுத்த முறை வெறுங்கையோடு நான் திரும்பமாட்டேன் என யமராஜ் என்ற விமர்சகர் தெரிவித்து உள்ளார்.
புதுடெல்லி,
ஒட்டு மொத்த உலகமும் எதிராக நின்றாலும், ஒருவருக்கு அவருடைய நண்பர் உறுதுணையாக நின்றால், எல்லாவற்றையும் அவரால் சாதிக்க முடியும். இதற்கு எடுத்துக்காட்டாக ஒரு சம்பவம் நடந்துள்ளது.
நட்பின் ஆழம் எப்பேர்பட்டது? என உணர செய்யும் வகையில் வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அதில், சாலையோர பள்ளம் ஒன்றில் கார் ஒன்று கவிழ தயாராக உள்ளது.
அதன் ஓட்டுநர் இருக்கையில் நபர் ஒருவர் அமர்ந்திருக்கிறார். அவருடைய நண்பர்கள் வெளியே இருக்கின்றனர். எப்போது கார் கவிழும் என தெரியாத சமயத்தில், அவர்கள் அனைவரும் தங்களுடைய கைகளாலேயே, ஒருவருடன் ஒருவர் சங்கிலி பிணைப்பை ஏற்படுத்தி, காருக்குள் இருந்த நண்பரை வெளியே கொண்டு வர முயல்கின்றனர்.
சிறிது நேர போராட்டத்திற்கு பின்னர், நண்பரின் கையை இறுக பிடித்து அவரை வெளியே கொண்டு வந்தனர். சரியாக, உடனே அந்த காரானது பள்ளத்தில் உருண்டது. இதனை அருகே உள்ள பெண் மற்றும் வேறு ஒருவர் வீடியோவாக எடுத்துள்ளனர்.
இந்த வீடியோ பகிரப்பட்டதும் வைரலானது. நெட்டிசன்கள் பலரும் பல்வேறு விமர்சனங்களை வெளியிட்டனர். ஆயிரக்கணக்கானோர் வீடியோவை லைக் செய்துள்ளனர். யமராஜ் என்ற பெயர் கொண்ட விமர்சகர் ஒருவர், இதனை பார்த்து நான் உணர்ச்சிவசப்பட்டு விட்டேன். அடுத்த முறை வெறுங்கையோடு திரும்பமாட்டேன் என தெரிவித்து உள்ளார்.
இதேபோன்று மற்றொருவர், வீடியோ படம் எடுத்தவர் உதவி செய்திருப்பார் என்றால், அந்த காரையும் கூட காப்பாற்றி இருக்கலாம் என்று தெரிவித்து உள்ளார். என்ன நீங்களும் வீடியோவை பார்த்து உணர்ச்சி வசப்பட்டு, நண்பர்களுக்கு வீடியோவை பகிர்ந்து விட்டீர்களா...!!