நாட்டில் கொரோனா ஆபத்து முடிவுக்கு வந்துவிட்டது: மத்திய சுகாதார மந்திரி


நாட்டில் கொரோனா ஆபத்து முடிவுக்கு வந்துவிட்டது: மத்திய சுகாதார மந்திரி
x

கோப்புப்படம்

நாட்டில் கொரோனா ஆபத்து முடிவுக்கு வந்துவிட்டதாக மத்திய சுகாதார மந்திரி மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.

லக்னோ,

மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா நேற்று உத்தரபிரதேச தலைநகர் லக்னோவில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அதை தொடர்ந்து அவர் பத்திரிகையாளர்களை சந்தித்தார்.

அப்போது அவரிடம் இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் தற்போதைய நிலை குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த மன்சுக் மாண்டவியா, "நாட்டில் மிக குறைந்த அளவில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு வருகிறது. இருப்பினும் தொற்றுநோய் முடிந்துவிட்டது என்றே கருதலாம். கொரோனா ஆபத்து முடிவுக்கு வந்துவிட்டது" என கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், "அதே சமயம் மக்கள் தங்கள் பாதுகாப்பை குறைக்க வேண்டும் என்று இதற்கு அர்த்தமல்ல. இப்போதைக்கு நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்" என்றார்.


Next Story