'நான் நேசிக்கும் நாடு இந்தியா' - டெல்லியில் ரிஷி சுனக் உற்சாகம்


நான் நேசிக்கும் நாடு இந்தியா - டெல்லியில் ரிஷி சுனக் உற்சாகம்
x

கோப்புப்படம்

நான் இந்தியாவுக்கு வந்திருப்பது எனக்கு தனிப்பட்ட முறையில் சிறப்பு வாய்ந்தது என்று இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் தெரிவித்தார்.

புதுடெல்லி,

ஜி-20 உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், தனது மனைவி அக்ஷதா மூர்த்தியுடன் நேற்று டெல்லி வந்தார்.

இந்திய வம்சாவளியை சேர்ந்தவரும், இன்போசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தியின் மருமகனுமான ரிஷி சுனக், டெல்லியில் மிகுந்த உற்சாகத்துடன் காணப்பட்டார். இதை அவரது வார்த்தைகளும் உறுதிப்படுத்தின.

வரவேற்பு நிகழ்ச்சிக்குப்பின் செய்தியாளர்களிடம் பேசும்போது அவர் கூறுகையில், 'நான் இந்தியாவுக்கு வந்திருப்பது எனக்கு தனிப்பட்ட முறையில் சிறப்பு வாய்ந்தது. இந்தியா நான் மிகவும் நேசிக்கும் நாடு. எனது குடும்பம் சார்ந்த நாடு. ஆனால் நான் இங்கிலாந்தை பிரதிநிதித்துவப்படுத்தவும், இந்தியாவுடன் நெருங்கிய தொடர்புகளை உருவாக்குவதற்கான வழிகளை கண்டறியவும், ஜி-20 உச்சி மாநாட்டை இந்தியா வெற்றிகரமாக்க எங்களின் பங்களிப்பை அளிப்பதற்கும் வந்துள்ளேன்' என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.


Next Story