இந்தியாவில் பணக்கார மாநிலம், பணக்கார குடும்பங்கள் அதிகம் உள்ள மாநிலங்கள்...! தமிழ்நாட்டிற்கு எந்த இடம்...?


இந்தியாவில் பணக்கார மாநிலம், பணக்கார குடும்பங்கள் அதிகம் உள்ள மாநிலங்கள்...! தமிழ்நாட்டிற்கு எந்த இடம்...?
x
தினத்தந்தி 13 July 2023 12:00 PM IST (Updated: 13 July 2023 12:00 PM IST)
t-max-icont-min-icon

சில மாநிலங்கள் பணக்கார மாநிலங்கள், சில ஏழை மாநிலங்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன. நடப்பு ஆண்டில் எந்த மாநிலம் எந்த நிலையில் உள்ளது என்று பார்ப்போம்.

புதுடெல்லி

இந்தியாவில் அதிக பணக்கார குடும்பங்கள் இருக்கும் மாநிலத்தில் மராட்டிய மாநிலம் முதல் இடத்தை பிடித்த நிலையில், தமிழ்நாடு 9 லட்சம் பணக்கார குடும்பங்களுடன் 2வது இடத்தை பிடித்து உள்ளது.

பஞ்சாப்-ல் 5.73 லட்சம் பணக்கார குடும்பங்கள், அரியானாவில் 4.55 லட்சம் பணக்கார குடும்பங்கள், குஜராத்தில் 7.99 லட்சம் பணக்கார குடும்பங்கள், கர்நாடகாவில் 6.58 லட்சம் பணக்கார குடும்பங்கள், ஆந்திராவில் 3.48 லட்சம் பணக்கார குடும்பங்கள், மேற்கு வங்காளத்தில் 6.12 லட்சம் பணக்கார குடும்பங்கள், உத்தர பிரதேசத்தில் 8.10 லட்சம் பணக்கார குடும்பங்கள், டெல்லியில் 7.42 லட்சம் பணக்கார குடும்பங்கள் உள்ளன.

இந்த ஆய்வை இந்தியாவின் நுகர்வோர் பொருளாதாரம் குறித்து ஆய்வு செய்யும் (பிரைஸ்) என்ற அமைப்பு மேற்கொண்டு உள்ளது. 1.25 ரூபாய்க்கும் குறைவான ஆண்டு வருமானம் கொண்ட குடும்பங்களை ஆதரவற்றவர்கள் என்ற பிரிவிலும், 1.25 லட்சம் முதல் 5 லட்சம் வரையிலான ஆண்டு வருமான கொண்ட குடும்பங்களை முயற்சிப்பவர்கள் என்ற பிரிவிலும், 5 லட்சம் முதல் 30 லட்சம் வரையிலான ஆண்டு வருமானம் கொண்ட குடும்பங்களை மிடில் கிளாஸ் ஆகவும், 30 லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக வருமானம் கொண்டவர்களை பணக்காரர்கள் என பிரிக்கிறது.

இப்படி 30 லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக வருமானம் கொண்ட குடும்பங்களின் எண்ணிக்கை 2015-16 ஆம் நிதியாண்டில் இருந்து 2020-21 வரையிலாக காலக்கட்டத்தில் 10.1 சதவீதம் வரையில் வளர்ச்சி அடைந்துள்ளது.

இந்தியாவில் 29 மாநிலங்கள் உள்ளன. இந்த மாநில உள்நாட்டு தயாரிப்புகளின் அடிப்படையில் 2022-23 ஆம் ஆண்டிற்கான பணக்கார மாநிலங்களின் பட்டியல் வெளியிடப்படுகிறது. ஜிஎஸ்டிபி (GSDP) யின் கீழ் எந்த மாநிலம் எந்த நிலையில் உள்ளது என்பது பற்றிய தகவலை பார்க்கலாம்.

சில மாநிலங்கள் பணக்கார மாநிலங்கள், சில ஏழை மாநிலங்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன. நடப்பு ஆண்டில் எந்த மாநிலம் எந்த நிலையில் உள்ளது என்று பார்ப்போம்.

மராட்டிய மாநிலம்: இந்தியாவின் பணக்கார மாநிலம் ஆகும் 366.67 பில்லியன் அமெரிக்க டாலர் மொத்த உள்நாட்டு உற்பத்தியுடன், இந்தியாவின் முதல் பணக்கார மாநிலமாக உள்ளது.

மராட்டியத்தின் தலைநகரான மும்பை, நாட்டின் நிதித் தலைநகரம் என்று அழைக்கப்படுகிறது. 45 சதவீத மக்கள் நகரங்களில் வசிக்கும் மராடடியம் நாட்டின் மூன்றாவது அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலமாகும்.

தமிழகம்: இந்தியாவிலேயே பணக்கார மாநிலம் பட்டியலில் தமிழகம் இரண்டாவது இடத்தை பிடித்து உள்ளது. இதன் ஜிஎஸ்டிபி 265.49 பில்லியன் அமெரிக்க டாலர்கள். இந்த மாநிலத்தின் 50 சதவீத மக்கள் நகரங்களில் வாழ்கின்றனர். நாட்டின் மக்கள் தொகையில் 9.6 சதவீதம் பேர் தமிழகத்தில் வசிக்கின்றனர்.

குஜராத்: 259.25 பில்லியன் டாலர் ஜிஎஸ்டிபியுடன் குஜராத் பணக்கார மாநிலங்களில் மூன்றாவது இடத்தில் உள்ளது. புகையிலை, பருத்தி துணி மற்றும் பாதாம் ஆகியவை குஜராத்தின் முக்கிய உற்பத்தியாகும். இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் மொத்த மருந்துகளில் மூன்றில் ஒரு பங்கு குஜராத்தில் தயாரிக்கப்படுகிறது.

கர்நாடகா: இந்தியாவின் பணக்கார மாநிலங்களின் பட்டியலில் கர்நாடகா நான்காவது இடத்தில் உள்ளது. கர்நாடகாவின் ஜிஎஸ்டிபி 247.38 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உள்ளது.

உத்தரப் பிரதேசம்: 234.96 பில்லியன் அமெரிக்க டாலர் ஜிஎஸ்டிபியுடன் உத்தரப் பிரதேசம் ஐந்தாவது இடத்தில் உள்ளது. உத்தரபிரதேசத்தில் நொய்டா, காசியாபாத் போன்ற நகரங்கள் வேகமாக வளர்ச்சியடைந்துள்ளன. மேலும் பல நிறுவனங்கள் உத்தரபிரதேசத்தில் தங்கள் கிளைகளை திறந்துள்ளன.

மேற்கு வங்கம்: ஜிஎஸ்டிபி 206.64 பில்லியன் அமெரிக்க டாலர் உடன் மேற்கு வங்காளம் ஆறாவது பணக்கார மாநிலமாகும். இங்கு பொருளாதாரத்தின் பெரும்பகுதி விவசாயம் மற்றும் நடுத்தர தொழில் ஆகும்.

ராஜஸ்தான்: ராஜஸ்தானின் ஜிஎஸ்டிபி 161.37 பில்லியன் அமெரிக்க டாலர்கள். கனிம வளங்கள் நிறைந்த ராஜஸ்தான் இந்தியாவின் ஏழாவது பணக்கார மாநிலமாகும். இங்கு பொருளாதாரம் விவசாயம், சுரங்கம் மற்றும் சுற்றுலாவை அடிப்படையாகக் கொண்டது. இது தங்கம், வெள்ளி, சுண்ணாம்பு, அமிர்த கல், ராக் பாஸ்பேட், செம்பு மற்றும் லிக்னைட் கனிமங்களை கொண்டுள்ளது. இது இந்தியாவில் இரண்டாவது பெரிய சிமெண்ட் உற்பத்தி செய்யும் மாநிலமாகும்.

தெலுங்கானா: தெலுங்கானா 157.35 ஜிஎஸ்டிபியுடன் எட்டாவது பெரிய மாநிலமாகும். கிருஷ்ணா மற்றும் கோதாவரி நதிகளின் ஓட்டம் காரணமாக இங்கு பாசன வசதிகள் நன்றாக உள்ளன. தெலுங்கானா தற்போது தகவல் தொழில்நுட்பம் மற்றும் உயிரி தொழில்நுட்பத்தில் சிறப்பு கவனம் செலுத்தி வருகிறது. இந்தியாவில் அதிக மென்பொருள் ஏற்றுமதி செய்யும் மாநிலங்களில் தெலுங்கானாவும் ஒன்று.

தொடர்ந்து ஆந்திரா,மத்தியபிரதேசம், கேரளா,ஆகியவை உள்ளன.


Next Story