ஜம்மு காஷ்மீரின் ரஜெளரி மாவட்டத்தில் கட்டுப்பாடுகள் தளர்வு
எனினும், சில பதற்றமான பகுதிகளில் மட்டும் பாதுகாப்பு படையினர் அதிக அளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.
ஜம்மு,
ஜம்மு காஷ்மீரின் எல்லைப்பகுதி மாவட்டம் ராஜோரி. இந்த மாவட்டத்தில் கடந்த வெள்ளிக்கிழமை இரு சமுதாயத்தினர் இடையே நிலப்பிரச்சினை ஏற்பட்டது. இதனால் வன்முறை வெடிக்கும் அபாயம் ஏற்பட்டது. இதையடுத்து ராஜோரி மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
மக்கள் கூட்டமாக கூட தடை விதிக்கப்பட்டதால் இயல்பு வாழ்க்கை முடங்கியது. தற்போது அங்கு பதற்றம் தணிந்துள்ளதால், கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்தது. இதையடுத்து, ஜம்மு காஷ்மீரின் ராஜோரி மாவட்டத்தில் இயல்பு நிலை திரும்பியுள்ளது. எனினும், சில பதற்றமான பகுதிகளில் மட்டும் பாதுகாப்பு படையினர் அதிக அளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.
Related Tags :
Next Story