மக்களவை காங்கிரஸ் எம்.பி.க்கள் 3 பேரின் இடைநீக்கத்தை ரத்து செய்ய தீர்மானம்


மக்களவை காங்கிரஸ் எம்.பி.க்கள் 3 பேரின் இடைநீக்கத்தை ரத்து செய்ய தீர்மானம்
x

அமளியில் ஈடுபட்டதாக மொத்தம் 146 எம்.பி.க்கள் குளிர்கால கூட்டத்தொடர் முழுவதும் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

டெல்லி,

நாடாளுமன்றத்தில் வண்ண புகைக்குண்டுகள் வீசப்பட்ட சம்பவம் தொடர்பாக மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா அறிக்கை தாக்கல் செய்யக்கோரி, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர். இந்த அமளியில் ஈடுபட்டதாக மொத்தம் 146 எம்.பி.க்கள் குளிர்கால கூட்டத்தொடர் முழுவதும் இடைநீக்கம் செய்யப்பட்டனர். இதில் மக்களவை எம்.பி.க்கள் மட்டும் 100 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இதில் காங்கிரஸ் எம்.பி.க்கள் அப்துல் காலிக், ஜெயக்குமார், விஜய் வசந்த் ஆகியோரையும் உரிமை குழுவின் அறிக்கை வரும் வரை சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் ஓம் பிர்லா உத்தரவிட்டார். இந்த நிலையில் மூவரும் நேற்று உரிமைக்குழுவின் முன் ஆஜராகி தங்கள் செயலுக்கு வருத்தம் தெரிவித்தனர்.

இதனை ஏற்றுக்கொண்ட உரிமைக்குழு, அவர்களின் இடைநீக்கத்தை ரத்து செய்யும் தீர்மானம் விரைவில் கொண்டுவரப்படும் என்று அறிவித்துள்ளது. இந்த நிலையில் உரிமைக்குழு நாளை மறுநாள் தனது அறிக்கையை சமர்ப்பிக்க உள்ளது.


Next Story