வளைகுடா நாடுகளில் வாழும் இந்தியர்களிடம் இருந்து வரும் பணவரவு வெகுவாக குறைவு - ரிசர்வ் வங்கி ஆய்வறிக்கையில் தகவல்!


வளைகுடா நாடுகளில் வாழும் இந்தியர்களிடம் இருந்து வரும் பணவரவு வெகுவாக குறைவு - ரிசர்வ் வங்கி ஆய்வறிக்கையில் தகவல்!
x

வெளிநாடு வாழ் இந்தியர்கள் அதிகமாகப் பணம் அனுப்பும் மாநிலங்களில் மராட்டியம் முதலிடம் பிடித்துள்ளது.

புதுடெல்லி,

வெளிநாடுகளில் வசிப்பவர்கள் தங்கள் சொந்த நாடுகளுக்குப் பணம் அனுப்புவது குறித்த ஆய்வறிக்கையை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.


அந்த அறிக்கையின்படி 2020-2021ம் ஆண்டில் வளைகுடா நாடுகளில் இருந்து வரும் பணவரவு வெகுவாக குறைந்துள்ளது.

வெளிநாடு வாழ் இந்தியர்கள் அதிகமாகப் பணம் அனுப்பும் மாநிலங்களில் முன்னணியில் திகழும் கேரளா, தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவை முந்தி மராட்டியம் முதலிடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

2020-2021ம் ஆண்டில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் அனுப்பிய பணத்தில் 35 சதவீதம் மராட்டியமும், 10 சதவீதம் கேரளாவும் பெற்றுள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேரளாவை சேர்ந்த பலர் வெளிநாடுகளில் பணிபுரிந்த நிலையில், கொரோனாவால் அவர்களில் பலர் தாயகம் திரும்பியது இதற்கு முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது.

அதிகமான பண வரவு அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் சிங்கப்பூர் நாடுகளில் இருந்து வந்திருப்பதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story