ராமநகரில் வெள்ளத்தால் பாதித்த மக்களுக்கு ரூ.10 லட்சம் நிவாரணம்; மந்திரி அஸ்வத் நாராயண் வழங்கினார்


ராமநகரில் வெள்ளத்தால் பாதித்த மக்களுக்கு ரூ.10 லட்சம் நிவாரணம்; மந்திரி அஸ்வத் நாராயண் வழங்கினார்
x

ராமநகரில் வெள்ளத்தால் பாதித்த மக்களுக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் தொகையை மந்திரி அஸ்வத் நாராயண் வழங்கினார்.

பெங்களூரு;

உயர்கல்வித்துறை மந்திரி அஸ்வத் நாராயண் நேற்று ராமநகர் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்து மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி நிவாரண உதவிகளை வழங்கினார். அவர் மொத்தம் ரூ.10 லட்சம் மதிப்பில் உதவிகளை வழங்கினார். அதன் பிறகு அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

ராமநகர் மாவட்டத்தில் நிவாரண பணிகளை மேற்கொள்ள நிதி பற்றாக்குறை இல்லை. கலெக்டரின் வங்கி கணக்கில் ரூ.16 கோடி கையிருப்பு உள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் அனைவருக்கும் நிவாரணம் வழங்கப்படும். நிவாரண பணிகளை மேற்கொள்ளும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மத்திய அரசும் நிதி வழங்கும்.

இவ்வாறு அஸ்வத் நாராயண் கூறினார்.


Next Story