ஸ்மார்ட்போனை தொடர்ந்து மிக குறைந்த விலையில் அறிமுகமாகும் ஜியோ லேப்டாப்?- வெளியான தகவல்


ஸ்மார்ட்போனை தொடர்ந்து மிக குறைந்த விலையில் அறிமுகமாகும் ஜியோ லேப்டாப்?- வெளியான தகவல்
x

ஜியோபுக் எனப்படும் பட்ஜெட் விலையிலான இந்த லேப்டாப்களில், பல்வேறு முக்கிய அம்சங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மும்பை,

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் குறைந்த விலையில் 4ஜி ஜியோ ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தி வெற்றி கண்டது. அதை தொடர்ந்து அவ்வப்போது புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் அப்டேட்டுகளை வெளியிட்டு வாடிக்கையாளர்களைக் கவர்ந்து வருகிறது.

இந்நிலையில், ஜியோ நிறுவனம் "ஜியோபுக்" என்ற லேப்டாப்பை அறிமுகப்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜியோபுக் எனப்படும் பட்ஜெட் விலையிலான இந்த லேப்டாப்களில், பல்வேறு முக்கிய அம்சங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த லேப்டாப்கள் 4ஜி வசதியுடன் இருக்கும் என்றும், இதன் விலை இந்திய விலையில் ரூ. 15,000 ரூபாய் இருக்கலாம் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ஜியோபுக்கிற்காக உலகளாவிய நிறுவனங்களான குவால்காம் மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளதாக பிரபல ஆங்கில செய்தி நாளிதழ் தெரிவித்துள்ளது. இந்த லேப்டாப்கள் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு முதற்கட்டமாக பள்ளி மாணவர்கள் மற்றும் அரசுத்துறை நிறுவனங்களுக்கு விற்பனை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story