ராஜஸ்தானில் 5ஜி சேவையை அறிமுகம் செய்தது ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம்


ராஜஸ்தானில் 5ஜி சேவையை அறிமுகம் செய்தது ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம்
x
தினத்தந்தி 22 Oct 2022 5:18 PM IST (Updated: 22 Oct 2022 6:07 PM IST)
t-max-icont-min-icon

நாத்வாரா நகரத்தில் 5ஜி சேவையை ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் தலைவர் ஆகாஷ் அம்பானி தொடங்கி வைத்தார்.

ஜெய்பூர்,

இந்தியாவில் 5ஜி தொலைதொடர்பு சேவையை கடந்த அக்டோபர் 1-ந்தேதி பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். தற்போது இருக்கும் 4ஜி சேவையை விட 10 மடங்கு அதிக வேகம் கொண்ட 5ஜி சேவையை, அடுத்த 2 ஆண்டுகளில் நாட்டின் அனைத்து பகுதிகளிலும் அறிமுகம் செய்ய உள்ளதாக இந்தியாவின் முன்னனி தொலைதொடர்பு நிறுவனங்களான ரிலையன்ஸ் மற்றும் பார்தி ஏர்டெல் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலம் நாத்வாரா நகரத்தில் 5ஜி சேவையை ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் தலைவர் ஆகாஷ் அம்பானி இன்று தொடங்கி வைத்தார். அங்குள்ள ஸ்ரீநாத்ஜி கோவிலில் நடைபெற்ற அறிமுக விழாவில் இந்த அறிவிப்பை அவர் வெளியிட்டார். ஏற்கனவே சென்னையில் 5ஜி சேவை தொடங்கப்பட்டுள்ள நிலையில், படிப்படியாக ஒவ்வொரு நகரங்களுக்கும் 5ஜி சேவை கொண்டு வரப்படும் என அவர் கூறியுள்ளார்.


Next Story