பீகாரில் சாதிவாரி கணக்கெடுப்பு வெளியீடு: சமூக நீதிக்கு கிடைத்த வெற்றி- ஐக்கிய ஜனதாதளம் பாராட்டு


பீகாரில் சாதிவாரி கணக்கெடுப்பு வெளியீடு: சமூக நீதிக்கு கிடைத்த வெற்றி- ஐக்கிய ஜனதாதளம் பாராட்டு
x

சாதிவாரி கணக்கெடுப்பு முடிவுகளை முதல்-மந்திரி நிதிஷ் குமார் தலைமையிலான அரசு நேற்று முன்தினம் வெளியிட்டது.

புதுடெல்லி,

பீகாரில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சாதிவாரி கணக்கெடுப்பு முடிவுகளை முதல்-மந்திரி நிதிஷ் குமார் தலைமையிலான அரசு நேற்று முன்தினம் வெளியிட்டது.

இதுகுறித்து நேற்று பத்திரிகையாளர்களிடம் பேசிய ஜக்கிய ஜனதாதளம் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் மற்றும் செய்தி தொடர்பாளர் ராஜீவ் ரஞ்சன், "முதல்-மந்திரி நிதிஷ் குமார் தலைமையிலான பீகார் அரசு சாதிவாரி கணக்கெடுப்பை நிறுத்தும் பா.ஜ.க.வின் அனைத்து முயற்சிகளையும் முறியடித்தது. சாதிவாரி கணக்கெடுப்பு வெளியீடு சமூக நீதிக்கு கிடைத்த வெற்றி ஆகும்.

இது, மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு முன்னேற்றம் மற்றும் செழிப்புக்கான புதிய வழிகளை திறக்கும். அவர்களின் உண்மையான எண்ணிக்கையை அறிவது, சிறப்பு திட்டங்களை உருவாக்குவதற்கும், அந்த பகுதியை அவர்கள் வெற்றிகரமாக அடைவதை உறுதி செய்வதற்கும் பெரும் உதவியாக இருக்கும்" என்றார்.


Next Story