சிறுபான்மையினரை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றுவது இந்தியாவை பிளவுபடுத்தும் - ரகுராம் ராஜன்


சிறுபான்மையினரை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றுவது இந்தியாவை பிளவுபடுத்தும் - ரகுராம் ராஜன்
x

Image Tweeted By @ProfCong

'இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு தாராளமய ஜனநாயகம் ஏன் தேவை' என்ற தலைப்பில் ரகுராம் ராஜன் பேசினார்.

ராய்ப்பூர்,

சத்தீஸ்கர் மாநிலம், ராய்பூரில், காங்கிரஸின் 5-வது அகில இந்திய தொழில் வல்லுநர்கள் மாநாடு நேற்று நடைபெற்றது. இதில் ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் உட்பட பலரும் கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சியில், "இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு தாராளமய ஜனநாயகம் ஏன் தேவை" என்ற தலைப்பில் ரகுராம் ராஜன் பேசினார்.

அப்போது அவர் கூறுகையில், "இந்த நாட்டில் தாராளமய ஜனநாயகத்திற்கு என்ன நடக்கிறது, அது உண்மையில் இந்திய வளர்ச்சிக்கு அவசியமா?ஆம், நமது எதிர்காலம் நமது தாராளவாத ஜனநாயகம் மற்றும் அதன் அமைப்புகளை வலுப்படுத்துவதில் உள்ளது. அவற்றை பலவீனப்படுத்தவில்லை, இது உண்மையில் நமது வளர்ச்சிக்கு அவசியம்.

பெரும்பாலான சிறுபான்மையினரை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றும் எந்தவொரு முயற்சியும் நாட்டை பிளவுபடுத்தும். அதனுடன் நாட்டில் வெறுப்பையும் அது உருவாக்கும். மேலும் இது வெளிநாட்டின் தலையீட்டால் நாட்டை பாதிக்கக்கூடிய ஒன்றாக மாற்றும்" என தெரிவித்தார்.

இலங்கையில் தற்போது நிலவும் நெருக்கடியை குறிப்பிட்ட அவர், ஒரு நாட்டின் அரசியல்வாதிகள் வேலைவாய்ப்பு நெருக்கடியை திசைதிருப்ப சிறுபான்மையினரை குறிவைப்பதன் மூலம் ஏற்படும் விளைவுகளை இலங்கை காண்பதாக தெரிவித்தார்.


Next Story