இமாசல பிரதேசம், அரியானாவில் அக்னிபத் திட்டப்படி இளம்பெண்கள் சேர்ப்பு


இமாசல பிரதேசம், அரியானாவில் அக்னிபத் திட்டப்படி இளம்பெண்கள் சேர்ப்பு
x

இமாசல பிரதேசம், அரியானாவில் அக்னிபத் திட்டப்படி இளம்பெண்கள் சேர்க்கப்பட உள்ளனர்.

ஹமிர்பூர்,

ராணுவத்தில் அக்னிபத் திட்டத்தின் கீழ் ஆண்களுக்கான ஆட்சேர்ப்பு பணிகள் நடந்து வருகின்றன. இந்த திட்டத்தின் கீழ் இளம்பெண்களையும் சேர்க்கும் நடவடிக்கைகளை ராணுவம் மேற்கொண்டு வருகிறது.

இந்த அடிப்படையில் இமாசல பிரதேசம், அரியானா மற்றும் சண்டிகாரில் நவம்பர் 7 முதல் 11-ந்தேதி வரை இளம்பெண்களுக்கான ஆட்சேர்ப்பு முகாம் நடக்கிறது. இதற்கான ஆன்லைன் பதிவு கடந்த 9-ந்தேதி முதல் தொடங்கி உள்ளது. அடுத்த மாதம் (செப்டம்பர்) 7-ந்தேதி வரை பதிவு செய்வோருக்கு மட்டுமே இந்த முகாம்களில் பங்கேற்கும் வாய்ப்பு வழங்கப்படும் என ராணுவம் அறிவித்து உள்ளது.

இந்த முகாம்களுக்கான அனுமதி அட்டைகளை அக்டோபர் 5-ந்தேதி முதல் பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும். 10-ம் வகுப்பு மற்றும் அதற்கு மேலும் படித்துள்ள 17½ முதல் 23 வயது வரையிலான இளம்பெண்கள் இந்த முகாம்களில் பங்கேற்கலாம் என ராணுவ அதிகாரி சஞ்சீவ் குமார் தியாகி தெரிவித்தார்.


Next Story