நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட ஜப்பானுக்கு இந்தியா உதவ தயார்- பிரதமர் மோடி


நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட ஜப்பானுக்கு இந்தியா உதவ தயார்- பிரதமர் மோடி
x
தினத்தந்தி 5 Jan 2024 10:25 PM GMT (Updated: 5 Jan 2024 10:27 PM GMT)

ஜப்பானில் நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

ஜப்பானில் கடந்த 1-ந்தேதி பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 7.6 ஆக பதிவான நிலநடுக்கம் அந்நாட்டின் இஷிகாவா, நிகாட்டா, டயோமா, யமஹடா மாகாணங்களை தாக்கியது. இந்த பயங்கர நிலநடுக்கத்தை தொடர்ந்து 150-க்கும் மேற்பட்ட முறை நிலஅதிர்வுகள் ஏற்பட்டன. இந்த பயங்கர நிலநடுக்கத்தில் இதுவரை 100 பேர் பலியாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட ஜப்பானுக்கு இந்தியா உதவ தயாராக இருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடாவுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில்,

"நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். பேரழிவால் பாதிக்கப்பட்ட ஜப்பான் மக்களுக்கு ஆதரவாக இருக்கிறோம். ஜப்பானுடனான உறவை இந்தியா மதிக்கிறது. இந்த நேரத்தில் சாத்தியமான அனைத்து உதவிகளையும் வழங்க தயாராக உள்ளது" என்று அவர் தெரிவித்துள்ளார்.


Next Story