கர்நாடகத்தில் முதல் பாதுகாக்கப்பட்ட ஈரநிலம் ரங்கனதிட்டு பறவைகள் சரணாலயத்திற்கு 'ராம்சர்' சர்வதேச அங்கீகாரம்
கர்நாடகத்தில் முதல் பாதுகாக்கப்பட்ட ஈரநிலம் ரங்கனதிட்டு பறவைகள் சரணாலயத்திற்கு ‘ராம்சர்’ சர்வதேச அங்கீகாரம் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அறிவித்துள்ளது.
பெங்களூரு,
மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கர்நாடக மாநிலம் மண்டியா மாவட்டத்தில் ரங்கனதிட்டு பறவைகள் சரணாலயம் உள்ளது. இந்த சரணாலயம், 188 வகை செடிகள், 225 வகை பறவைகள் உள்பட பலவகை உயிரினங்களின் வாழிடமாக உள்ளது. இதற்கு 'ராம்சர்' அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
கர்நாடகத்தின் முதல் நீர்பறவைகள் வாழிடமாக இது திகழ்கிறது. அண்டை மாநிலமான தமிழ்நாட்டில் இதுபோன்று மொத்தம் 6 ஈரநிலங்கள் 'ராம்சர்' அங்கீகாரம் பெற்றுள்ளன. பறவைகளின் இனபெருக்கம், அவை வாழ தகுதியான இடம் போன்றவற்றின் அடிப்படையில் 'ராம்சர்' சர்வதேச அங்கீகாரம் அறிவிக்கப்படுகிறது.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருந்தது.
Related Tags :
Next Story