டெல்லியை நோக்கி பேரணி - விவசாயிகள் அறிவிப்பு


டெல்லியை நோக்கி பேரணி - விவசாயிகள் அறிவிப்பு
x

டெல்லியை நோக்கி பேரணி நடத்த உள்ளதாக விவசாயிகள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.

சண்டிகர்,

கடந்த பிப்ரவரி மாதம் விவசாயிகள் போராட்டம் காரணமாக பஞ்சாப், அரியானா, டெல்லி, காஷ்மீரை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலையில், ஷம்பு பகுதியில் முள்வேலிகளை அமைத்து அரியானா அரசு தடையை ஏற்படுத்தியது. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

இதனிடையே கடந்த வாரம் விவசாயிகள் போராட்டம் தொடர்பான பொதுநல மனுவை பஞ்சாப்-அரியானா ஐகோர்ட்டு, விவசாயிகள் போராட்டத்தால் மூடப்பட்ட ஷம்பு எல்லையை ஒரு வாரத்திற்குள் திறக்க வேண்டும் என உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து அரியானா அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளது.

இந்நிலையில் ஷம்பு எல்லை திறக்கப்பட்டவுடன் டெல்லியை நோக்கி பேரணி செல்ல முடிவு செய்துள்ளதாக விவசாயிகள் அமைப்பு தலைவர் ஜக்ஜித் சிங் தலேவால் அறிவித்துள்ளார். சண்டிகரில் விவசாய சங்க தலைவர்களுடன் நடத்தப்பட்ட ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு இந்த அறிவிப்பை அவர் வெளியிட்டுள்ளார்.

விவசாயிகள் புதிய கோரிக்கைகள் எதையும் முன்வைக்கவில்லை என்றும், 2021-ம் ஆண்டு விவசாயிகளுக்கு அளித்த வாக்குறுதிகளை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும் என்று கோரி பேரணியை நடத்த உள்ளதாகவும் ஜக்ஜித் சிங் தலேவால் தெரிவித்துள்ளார்.


Next Story