இந்தியாவில் ஆகஸ்ட் 7 முதல் ஆகாசா ஏர் புதிய விமான சேவை தொடக்கம்


இந்தியாவில் ஆகஸ்ட் 7 முதல் ஆகாசா ஏர் புதிய விமான சேவை தொடக்கம்
x

Image Tweeted By @AkasaAir 

மும்பை - அகமதாபாத் வழித்தடத்தில் முதல் விமான சேவையை அந்த நிறுவனம் இயக்குகிறது.

புதுடெல்லி.

பிரபல பங்குச் சந்தை முதலீட்டாளரான ராகேஷ் ஜுன்ஜுன்வாலா தொடங்கி இருக்கும் 'ஆகாசா ஏர்' விமான சேவைக்கு விமான போக்குவரத்து ஆணையரகம் சமீபத்தில் அனுமதி அளித்தது. ஆகாசா விமான நிறுவனம் இந்தியாவில் வணிக ரீதியான விமானங்களை இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஆகஸ்ட் 7 ஆம் தேதி முதல் பயணிகள் விமான சேவையை அந்த நிறுவனம் தொடங்க இருக்கிறது. மும்பை - அகமதாபாத் வழித்தடத்தில் முதல் விமான சேவையை போயிங் 737 மேக்ஸ் விமானத்தைப் பயன்படுத்தி அந்த நிறுவனம் இயக்குகிறது.

இதற்கான பயணச்சீட்டு விற்பனை தொடங்கியுள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. அதே போல் பெங்களூரு - கொச்சி இடையே அந்த நிறுவனம் ஆகஸ்ட் 13 ஆம் தேதி முதல் விமான சேவையை தொடங்க இருப்பது குறிப்பிடத்தக்கது.


Next Story