காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேவுடன் மாநிலங்களவை எதிர்கட்சி உறுப்பினர்கள் இன்று சந்திப்பு


காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேவுடன் மாநிலங்களவை எதிர்கட்சி உறுப்பினர்கள் இன்று சந்திப்பு
x

நாடாளுமன்ற விவகாரம் குறித்து மல்லிகார்ஜுன் கார்கேவுடன் எதிர்கட்சி உறுப்பினர்கள் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

புதுடெல்லி,

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது அமர்வு கடந்த 13-ந்தேதி தொடங்கியது. கூட்டத்தொடரின் முதல் நாளில் இருந்தே எதிர்க்கட்சிகளும், ஆளும் கட்சியும் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றன.

இந்திய ஜனநாயகம் குறித்து லண்டனில் ராகுல்காந்தி பேசிய உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ஜ.க. எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர். அதேவேளை, அதானி விவகாரம் உள்பட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றன.

இதன் காரணமாக மக்களவையும், மாநிலங்களவையும் கடந்த 3 நாட்களாக தொடர்ந்து முடங்கின. இதனிடையே அதானி விவகாரத்தில் அமலாக்கத்துறை விசாரணை வேண்டும் என வலியுறுத்தி, நாடாளுமன்றத்தில் இருந்து அமலாக்கத்துறை அலுவலகம் எதிர்க்கட்சிகள் நேற்று பேரணி நடத்தினர்.

நாடாளுமன்ற நடவடிக்கைகள் தொடர்ந்து 3 நாட்களாக முடங்கியுள்ள நிலையில், இன்று காலை 11 மணி மீண்டும் அவை கூடுகிறது. இந்நிலையில் இன்று காலை 10 மணிக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேவின் அலுவலகத்தில் எதிர்கட்சி உறுப்பினர்கள் சந்திப்பு நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சந்திப்பின் போது நாடாளுமன்ற விவகாரம் குறித்து மல்லிகார்ஜுன் கார்கேவுடன் எதிர்கட்சி உறுப்பினர்கள் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


Next Story