இந்திய - சீன எல்லை மோதல் விவகாரம்: மாநிலங்களவையில் கடும் அமளி


இந்திய - சீன எல்லை மோதல் விவகாரம்: மாநிலங்களவையில் கடும் அமளி
x

இந்திய - சீன எல்லை மோதல் குறித்து விவாதிக்க வலியுறுத்தி அமளியில் ஈடுபட்ட எதிர்க்கட்சிகள், மாநிலங்களவை துணைத் தலைவரின் இருக்கையை முற்றுகையிட்டதை அடுத்து அவை ஒத்திவைக்கப்பட்டது.

புதுடெல்லி,

அருணாச்சலப் பிரதேச எல்லையில் உள்ள தவாங் பகுதிக்குள் கடந்த 9ம் தேதி நுழைய முயன்ற சீன வீரர்களை இந்திய ராணுவம் விரட்டி அடித்தது. அப்போது இரு தரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்திய ராணுவ வீரர்களின் தொடர் தாக்குதலை அடுத்து, சீன ராணுவத்தினர் பின் வாங்கி ஓடினர்.

இந்த மோதல் குறித்து மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் நாடாளுமன்றத்தில் கடந்த 13ம் தேதி விளக்கம் அளித்தார். எனினும் தங்களின் கேள்விகளுக்கு உரிய பதில் அளிக்கவில்லை என்று கூறி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றன. இன்று நாடாளுமன்றம் கூடியதும் மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் இந்த விவகாரத்தை எழுப்பின. இதனால், மாநிலங்களவை நண்பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.


Next Story