உத்தரகாண்டில் போர் நினைவுச்சின்னத்தை திறந்து வைத்தார் ராஜ்நாத் சிங்


உத்தரகாண்டில் போர் நினைவுச்சின்னத்தை திறந்து வைத்தார் ராஜ்நாத் சிங்
x
தினத்தந்தி 15 Jan 2023 4:48 AM IST (Updated: 15 Jan 2023 4:52 AM IST)
t-max-icont-min-icon

உத்தரகாண்டில் போர் நினைவுச்சின்னத்தை ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் திறந்து வைத்தார்.

டேராடூன்,

ராணுவத்தில் பணியாற்றி நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்த 1,400 ராணுவ வீரர்களின் நினைவாக உத்தரகாண்டின் டேராடூன் நகரில் போர் நினைவுச்சின்னம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நினைவுச்சின்னத்தை ராணுவ மந்திரி ராஜ்நாத்சிங் நேற்று திறந்துவைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் மாநில முதல்-மந்திரி புஷ்கர் சிங் தாமி, முப்படைகளின் தலைமை தளபதி அனில் சவுகான் ஆகியோர் பங்கேற்றனர். அவர்கள் 3 பேரும் நினைவுச்சின்னத்தில் மலர்வளையம் வைத்து ராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்தினர்.

அதை தொடர்ந்து அங்கு இருந்த ராணுவ வீரர்கள் மத்தியில் பேசிய ராஜ்நாத் சிங், "நாட்டின் சமூக-பொருளாதார வளர்ச்சிக்கு உங்கள் பங்களிப்பு மிகப் பெரியது. உங்களால்தான் இன்று நாங்கள் பெருமையுடன் நிற்க முடிகிறது. நாட்டிற்காக நீங்கள் செய்யும் பெரும் தியாகங்களுக்கு நாங்கள் கொடுப்பது ஒரு சிறிய விஷயம்தான். போர் வீரர்களுக்கு முழு நாடும் நன்றிக்கடன் பட்டிருக்கிறது" என கூறினார்.


Next Story