இந்தியா- ஆஸ்திரேலியா இடையே பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான பேச்சுவர்த்தை! இருநாட்டு பாதுகாப்புத்துறை மந்திரிகள் பங்கேற்பு


இந்தியா- ஆஸ்திரேலியா இடையே பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான பேச்சுவர்த்தை! இருநாட்டு பாதுகாப்புத்துறை மந்திரிகள் பங்கேற்பு
x

இந்தியா- ஆஸ்திரேலியா இடையே பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான வழிவகைகள் குறித்து புதுடெல்லியில் ஆலோசனை நடைபெற்றது.

புதுடெல்லி,

இந்தியா- ஆஸ்திரேலியா இடையே பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான வழிவகைகள் குறித்து புதுடெல்லியில் ஆலோசனை நடைபெற்றது. அதில் பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங், ஆஸ்திரேலிய பாதுகாப்புத்துறை மந்திரி ரிச்சர்டு மார்லஸ் ஆகியோர் கலந்துகொண்டு பேச்சுவர்த்தை நடத்தினர்.

கொரோனா பெருந்தொற்று சவால்களுக்கிடையே இரு நாடுகளின் பாதுகாப்பு ஒத்துழைப்பு அதிகரித்துள்ளது குறித்தும் மேலும் ஒத்துழைப்பை அதிகரிப்பதற்கான வழிவகைகள் குறித்தும் இரு நாட்டு அமைச்சர்களும் ஆய்வு செய்தனர்.

ஆஸ்திரேலியாவில் இந்த ஆண்டு கடைசியில் நடைபெற உள்ள கூட்டத்தின் போது, பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் ஒத்துழைப்பு தொடர்பாக இந்தியா-ஆஸ்திரேலியா கூட்டு பணிக்குழுவை நிறைவேற்றுவதற்கு இருதரப்பும் உறுதி பூண்டனர்.

கடந்த மாதம் இரு நாட்டு பிரதமர்கள் இடையே நடைபெற்ற காணொலி மாநாட்டின் போது அறிவிக்கப்பட்ட "ஜெனரல் ராவத் இளைய அதிகாரிகள் பரிமாற்று திட்டத்தை" தொடங்குவதற்கு இரு நாட்டு அமைச்சர்களும் வரவேற்பு தெரிவித்தனர்.


Next Story