'அக்னிபத்' திட்டம் பற்றி நாடாளுமன்ற குழுவிடம் ராஜ்நாத் சிங் விளக்குகிறார்


அக்னிபத் திட்டம் பற்றி நாடாளுமன்ற குழுவிடம் ராஜ்நாத் சிங் விளக்குகிறார்
x

இளைஞர்கள் 4 ஆண்டு காலம் ஒப்பந்த ரீதியில் முப்படைகளிலும் வீரராக சேருகிற வாய்ப்பினை ‘அக்னிபத்’ என்ற திட்டம் மூலம் மத்திய அரசு வழங்கி உள்ளது.

புதுடெல்லி,

இளைஞர்கள் 4 ஆண்டு காலம் ஒப்பந்த ரீதியில் முப்படைகளிலும் வீரராக சேருகிற வாய்ப்பினை 'அக்னிபத்' என்ற திட்டம் மூலம் மத்திய அரசு வழங்கி உள்ளது. இந்த திட்டத்தின்படி முப்படைகளில் சேருவோருக்கு பல்வேறு சலுகைகளும் அறிவிக்கப்பட்டன. ஆனாலும் இந்த திட்டத்துக்கு எதிராக பல்வேறு போராட்டங்கள் நடந்தன.

இந்த நிலையில் 'அக்னிபத்' திட்டத்தின் பல்வேறு அம்சங்கள் பற்றி பாதுகாப்பு துறைக்கான நாடாளுமன்ற ஆலோசனைக்குழு உறுப்பினர்கள் மத்தியில் ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் 10-ந் தேதி விளக்கி பேசுகிறார். இந்த குழுவில் ஆளும் கட்சியினருடன் எதிர்க்கட்சியினரும் உறுப்பினர்களாக உள்ளனர். இந்த கூட்டத்தில் முப்படைகளின் தளபதிகள் மற்றும் பாதுகாப்புத்துறை செயலாளரும் கலந்து கொள்வார் என தகவல்கள் கூறுகின்றன.

பாதுகாப்பு துறைக்கான நாடாளுமன்ற ஆலோசனைக்குழுவில் காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, தேசிய மாநாடு கட்சித்தலைவர் பரூக் அப்துல்லா, திரிணாமுல் காங்கிரஸ் மூத்த தலைவர் சுதீப் பந்தோபாத்யாய் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.

இந்த 'அக்னிபத்' திட்டத்தின்கீழ் விமானப்படையில் சேருவதற்கு 7.5 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story