'நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவை புறக்கணிக்கும் முடிவை எதிர்கட்சிகள் மறுஆய்வு செய்ய வேண்டும்' - ராஜ்நாத் சிங் வேண்டுகோள்


நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவை புறக்கணிக்கும் முடிவை எதிர்கட்சிகள் மறுஆய்வு செய்ய வேண்டும் - ராஜ்நாத் சிங் வேண்டுகோள்
x

நாடாளுமன்ற திறப்பு விழாவை யாரும் அரசியலாக்கக் கூடாது என மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் கேட்டுக் கொண்டுள்ளார்.

புதுடெல்லி,

டெல்லியில் கட்டப்பட்டுள்ள புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் மோடி வரும் 28-ந்தேதி திறந்து வைக்க உள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 19 எதிர்க்கட்சிகள் திறப்பு விழாவை புறக்கணிக்க உள்ளதாக அறிவித்துள்ளன. நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் மோடி திறந்து வைக்கக்கூடாது என்றும், ஜனாதிபதி திரவுபதி முர்மு திறந்து வைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளன.

இந்நிலையில் புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவை புறக்கணிக்கும் முடிவை எதிகட்சிகள் மறுஆய்வு செய்ய வேண்டும் என மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் கோரிக்கை விடுத்துள்ளார். புதிய நாடாளுமன்ற கட்டிடம் ஜனநாயகம் மற்றும் அனைத்து இந்தியர்களின் விருப்பங்களின் அடையாளமாக திகழ்வதாக தெரிவித்துள்ள அவர், நாடாளுமன்ற திறப்பு விழாவை யாரும் அரசியலாக்கக் கூடாது என கேட்டுக் கொண்டுள்ளார்.



Next Story