ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் 'நீட்' பயிற்சி மையத்தில் படித்த 3 மாணவர்கள் தற்கொலை
ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் ‘நீட்' பயிற்சி மையத்தில் படித்த 3 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஜெய்ப்பூர்,
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள கோட்டா நகரம், மருத்துவ, என்ஜினீயரிங் படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்கும் பிரபல மையமாக உள்ளது. இங்குள்ள பயிற்சி மையங்களில், நாடு முழுவதிலும் இருந்து வந்துள்ள ஆயிரக்கணக்கான மாணவர்கள் பயின்று வருகின்றனர்.
அவ்வாறு இங்கு 'நீட்' பயிற்சி மையம் ஒன்றில் பயின்றுவந்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த அங்குஷ் ஆனந்த் (வயது 18), உஜ்வல் குமார் (17) என்ற இரு மாணவர்கள் தாங்கள் தங்கியிருந்த அறைகளில் நேற்று முன்தினம் காலை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டனர்.
மற்றொரு சம்பவத்தில், மத்தியபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பிரணவ் வர்மா (17) என்ற மாணவர் தான் தங்கியிருந்த விடுதி அறையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்டார்.
இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story