ராஜஸ்தானில் வசுந்தரா ராஜே அமோக வெற்றி: முதல்-மந்திரியாக வாய்ப்பு


ராஜஸ்தானில் வசுந்தரா ராஜே அமோக வெற்றி: முதல்-மந்திரியாக வாய்ப்பு
x
தினத்தந்தி 3 Dec 2023 3:30 PM IST (Updated: 3 Dec 2023 3:33 PM IST)
t-max-icont-min-icon

ராஜஸ்தானில் பெரும்பான்மைக்கு தேவையான இடங்களை விட அதிக இடங்களில் பாஜக வெற்றி பெற்றுள்ளது.

ஜெய்ப்பூர்:

ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரசிடம் இருந்து பாஜக ஆட்சியை கைப்பற்றியுள்ளது. சட்டமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வரும் நிலையில், பெரும்பான்மைக்கு தேவையான இடங்களை விட அதிக இடங்களில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. அக்கட்சியின் முக்கிய தலைவர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.

கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் முதல்-மந்திரியுமான வசுந்தரா ராஜே சிந்தியா, தான் போட்டியிட்ட ஜல்ராபதான் தொகுதியில் 53,193 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். வசுந்தரா ராஜே முதல்-மந்திரியாக தேர்ந்தெடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜல்ராபதான் தொகுதியில் வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் விவரம்:

வசுந்தரா ராஜே (பாஜக)- 1,38,831

ராம்லால் (காங்கிரஸ்) - 85,638

மகாசத் (பகுஜன் சமாஜ் கட்சி) - 3,431

பவன் குமார் மெஹர் (இந்திய மக்கள் பசுமை கட்சி) - 2,177.


Next Story