தேர்தல் சவாலில் தோல்வி...பதவியை ராஜினாமா செய்த ராஜஸ்தான் மந்திரி


Rajasthan minister Kirodi Lal Meena
x

தேர்தல் பிரசாரத்தின் போது தனது பொறுப்பில் உள்ள 7 நாடாளுமன்ற தொகுதிகளில் ஏதேனும் ஒரு தொகுதியை பாஜக இழந்தால், மந்திரி பதவியை ராஜினாமா செய்வேன் என்று தெரிவித்திருந்தார்.

ஜெய்ப்பூர்,

ராஜஸ்தான் மாநில வேளாண்மை, தோட்டக்கலை, ஊரக வளர்ச்சித்துறை மந்திரியாக இருப்பவர் கிரோடி லால் மீனா (வயது 72). இவர் சமீபத்தில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தின் போது தனது பொறுப்பில் உள்ள 7 நாடாளுமன்ற தொகுதிகளில் ஏதேனும் ஒரு தொகுதியை பாஜக இழந்தால், மந்திரி பதவியை ராஜினாமா செய்வேன் என தெரிவித்திருந்தார்.

ஆனால் கிரோடி லால் பிரசாரம் செய்த 7 தொகுதிகளில் 4-ல் பாஜக தோல்வி அடைந்தது. இதனால் தேர்தல் முடிவுகள் வெளியானது முதலே அவர் தனது மந்திரி அலுவலகத்திற்கு வராமல் இருந்தார்.

இந்நிலையில், ராஜஸ்தான் அமைச்சரவையில் இருந்து கிரோடி லால் மீனா ராஜினாமா செய்ததாக அவரது உதவியாளர் தெரிவித்துள்ளார். மேலும் அவர் தனது ராஜினாமா கடிதத்தை 10 நாட்களுக்கு முன்பு முதல்-மந்திரியிடம் கொடுத்தார் என்றும் அவர் தெரிவித்தார். ஆனால், அவரது ராஜினாமா தற்போது வரை ராஜஸ்தான் முதல்-மந்திரியால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை என கூறப்படுகிறது.


Next Story