ராஜஸ்தான் முதல்-மந்திரி பதவி: அசோக் கெலாட் மாற்றமா? - ஓரிரு நாளில் சோனியா முடிவு


ராஜஸ்தான் முதல்-மந்திரி பதவி: அசோக் கெலாட் மாற்றமா? - ஓரிரு நாளில் சோனியா முடிவு
x

கோப்புப்படம்

ராஜஸ்தான் முதல்-மந்திரி பதவியில் இருந்து அசோக் கெலாட் மாற்றப்படுவாரா என்பது குறித்து ஓரிரு நாளில் முடிவு செய்யப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

புதுடெல்லி,

ராஜஸ்தான் முதல்-மந்திரி அசோக் கெலாட், காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிடவில்லை என அறிவித்து விட்டார்.

மாநிலத்தில் முதல்-மந்திரி பதவி தொடர்பாக அவரது ஆதரவாளர்கள் கட்சித்தலைமைக்கு நெருக்கடி அளித்த விவகாரம் தொடர்பாக அவர் தார்மீகப்பொறுப்பேற்று, காங்கிரஸ் தலைவர் சோனியாவை நேற்று சந்தித்து மன்னிப்பு கேட்டார்.

ஆனால் முதல்-மந்திரி பதவியில் இருந்து அவர் மாற்றப்படுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதுபற்றி கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் நேற்று சோனியா இல்லத்துக்கு வெளியே நிருபர்களிடம் கூறுகையில், "ராஜஸ்தான் முதல்-மந்திரி பதவி குறித்து ஓரிருநாளில் சோனியா முடிவு எடுப்பார்" என அறிவித்தார்.

"காங்கிரஸ் தலைவர் பதவிக்கு யார் யார் போட்டி என்பது நாளை (இன்று) தெளிவாகிவிடும்" எனவும் அவர் தெரிவித்தார்.


Next Story