காங்கிரஸ் தலைவர் தேர்தலில் இருந்து என்னை வெளியேற்றும் முயற்சியை தடுத்தார் ராகுல் காந்தி - சசி தரூர்


காங்கிரஸ் தலைவர் தேர்தலில் இருந்து என்னை வெளியேற்றும் முயற்சியை தடுத்தார் ராகுல் காந்தி - சசி தரூர்
x

கோப்புப்படம்

காங்கிரஸ் தலைவர் தேர்தலில் இருந்து தன்னை வெளியேற்ற நடந்த முயற்சியை ராகுல் காந்தி தடுத்ததாக சசி தரூர் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தல் வரும் 17-ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் 19-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அன்றே அறிவிக்கப்பட உள்ளது. இந்த தேர்தலில் காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜூன கார்கே மற்றும் கேரள காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் இடையே நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது.

மல்லிகார்ஜூன கார்கேவுக்கு சோனியா காந்தியின் ஆதரவு உள்ளதாக கூறப்படுகிறது. காங்கிரஸ் தலைவர் தேர்தலில் வெற்றிபெறும் நோக்கத்தோடு சசி தரூர் மற்றும் கார்கே தீவிர நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இருவரும் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்களை சந்தித்து ஆதரவுகோரி வருகின்றனர்.

இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிடுவது குறித்து கருத்து தெரிவித்துள்ள சசிதரூர், காங்கிரஸ் தலைவர் தேர்தலில் தாம் தாக்கல் செய்துள்ள வேட்புமனுவை திரும்பப் பெறச்செய்ய வேண்டும் என மூத்த தலைவர்கள் சிலர் ராகுல்காந்தியிடம் வலியுறுத்தியதாக தெரிவித்துள்ளார்.

ஆனால் அதனை நிராகரித்த ராகுல்காந்தி, தலைவர் தேர்தலில் போட்டியிருப்பதுதான் காங்கிரசுக்கு நல்லது என்று தெரிவித்ததாக சசிதரூர் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிருக்க வேண்டும் என கடந்த 10 வருடங்களாக வலியுறுத்தி வருகிறேன் என்று ராகுல்காந்தி தம்மிடம் கூறியதாகவும் சசிதரூர் தெரிவித்துள்ளார்.


Next Story