வருங்கால வைப்பு நிதி வட்டி குறைப்பு: மத்திய அரசு மீது ராகுல் காந்தி தாக்கு
இ.பி.எப். என்னும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கான (2021-22 நிதி ஆண்டு) வட்டி விகிதத்தை மத்திய அரசு 8.1 சதவீதமாக குறைத்து உத்தரவிட்டுள்ளது.
புதுடெல்லி,
இ.பி.எப். என்னும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கான (2021-22 நிதி ஆண்டு) வட்டி விகிதத்தை மத்திய அரசு 8.1 சதவீதமாக குறைத்து உத்தரவிட்டுள்ளது. இதற்காக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மத்திய அரசை சாடி உள்ளார். இதையொட்டி அவர் டுவிட்டரில் நேற்று வெளியிட்ட பதிவில் கூறி இருப்பதாவது:-
ஒருவரது குடியிருப்பு முகவரியை லோக் கல்யாண் மார்க் என்று கூறுவதாலேயே, அது மக்களுக்கு நலனை கொண்டு வர வேண்டியதில்லை. (பிரதமர் மோடியின் அதிகாரபூர்வ இல்லம், டெல்லி லோக் கல்யாண் மார்க்கில் உள்ளது.) 6.5 கோடி தொழிலாளர்களின் நிகழ்காலம் மற்றும் எதிர்காலத்தை அழிப்பதற்காக விலைவாசி உயர்வு, வருமானம் குறைப்பு மாடலை பிரதமர் அமல்படுத்தி உள்ளார். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
கடந்த 2015-ம் ஆண்டில் இருந்து தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி வட்டி விகிதம் குறைக்கப்பட்டு வந்துள்ளதைக் காட்டும் வரைபடத்தையும் ராகுல் காந்தி பகிர்ந்துள்ளார்.