இந்தியாவை பிளவுப்படுத்தும் நோக்கத்தில் ராகுல்காந்தி பாதயாத்திரை - மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானி
இந்தியாவை பிளவுப்படுத்தும் நோக்கத்தில் ராகுல்காந்தி பாதயாத்திரை மேற்கொள்கிறார் என மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானி குற்றம்சாட்டியுள்ளார்.
பெங்களூரு,
பெங்களூருவில் நடந்த பா.ஜனதா அரசின் சாதனை விளக்க மாநாட்டில் மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானி பேசியதாவது:-
மத்தியில் பா.ஜனதா அரசு அமைந்த பின்பு எந்த மாநிலத்திற்கும் பாரபட்சம் பார்க்காமல் நிதி ஒதுக்கி வருகிறது. கொரோனாவுக்கு எதிரான போரில் நமது நாட்டிலேயே தடுப்பூசி தயாரிக்கப்பட்டது. இதற்கு எதிராக காங்கிரசார் மக்களிடம் பிரசாரம் செய்திருந்தாா்கள்.
ராகுல்காந்தி, பாரத் ஜோடா என்ற பெயரில் இந்திய ஒற்றுமை பயணத்தை தொடங்கி இருப்பதாக தெரிவித்துள்ளார். இது எனக்கு மிகுந்த அதிர்ச்சியை கொடுத்தது. இந்தியாவை பிளவுப்படுத்தும் நோக்கத்தில் ராகுல்காந்தி பாதயாத்திரை தொடங்கி இருக்கிறார்.
இந்தியாவுக்கு எதிராக கோஷங்களை எழுப்பியவர்களை பாதயாத்திரையில் சேர்த்துள்ளனர். இது தேசத்துரோகத்திற்கு சமமானது. அவரது பாதயாத்திரை இந்தியாவுக்கு எதிரானதாகும். அதிகார பசிக்காக இந்த பாதயாத்திரையை ராகுல்காந்தி நடத்துகிறார்.
இவ்வாறு ஸ்மிரிதி இரானி கூறினார்.