ராகுல் காந்தி எம்.பி. தேர்தலில் ஐதராபாத் தொகுதியில் போட்டியிட வேண்டும்: அசாதுதீன் ஒவைசி சவால்


ராகுல் காந்தி எம்.பி. தேர்தலில் ஐதராபாத் தொகுதியில் போட்டியிட வேண்டும்:  அசாதுதீன் ஒவைசி சவால்
x

ராகுல் காந்தி எம்.பி. தேர்தலில் வயநாடுக்கு பதிலாக ஐதராபாத் தொகுதியில் போட்டியிட வேண்டும் என அசாதுதீன் ஒவைசி சவால் விட்டுள்ளார்.

ஐதராபாத்,

தெலுங்கானாவில் தன்னுடைய நாடாளுமன்ற தொகுதியான ஐதராபாத் நகரில் நடந்த பொது கூட்டம் ஒன்றில் ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சியின் தலைவர் அசாதுதீன் ஒவைசி கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு சவால் விடும் வகையில் பேசினார். அவர் கூறும்போது, உங்களுடைய தலைவருக்கு (ராகுல் காந்தி) நான் சவால் விடுகிறேன். அவர் நடைபெற உள்ள நாடாளுமன்ற மக்களவை தேர்தலில், வயநாடு தொகுதிக்கு பதிலாக ஐதராபாத் தொகுதியில் இருந்து போட்டியிட வேண்டும்.

நீங்கள் பெரிய அறிக்கைகளை எல்லாம் விடுகிறீர்கள். நீங்கள் களத்திற்கு வந்து எனக்கு எதிராக போட்டியிடுங்கள். காங்கிரசில் உள்ள மக்கள் நிறைய விசயங்களை கூறுவார்கள்.

ஆனால், நான் தயாராகவே இருக்கிறேன். காங்கிரஸ் ஆட்சியிலேயே பாபர் மசூதி மற்றும் செயலக மசூதி அடித்து, தாக்கப்பட்டது என்று கூறியுள்ளார்.

இந்த மாத தொடக்கத்தில் பேசிய ராகுல் காந்தி, தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகர ராவ் அல்லது ஒவைசிக்கு எதிராக சி.பி.ஐ., அமலாக்க துறை வழக்குகள் எதுவும் இல்லை. அவர்களை தன்னுடைய சொந்தங்களாக பிரதமர் மோடி எண்ணுகிறார்.

தெலுங்கானாவில் பி.ஆர்.எஸ்., பா.ஜ.க. மற்றும் ஏ.ஐ.எம்.ஐ.எம். ஆகிய கட்சிகள் சேர்ந்த அணிக்கு எதிராக நாங்கள் போட்டியிடுவோம். அவர்கள் வெவ்வேறு கட்சிகள் என கூறி கொண்டாலும், ஒன்றாகவே இணைந்து பணியாற்றுகிறார்கள் என கூறினார்.


Next Story