ரவீந்திரநாத் தாகூர், அப்துல் கலாம் படங்களை ரூபாய் தாள்களில் அச்சிட ரிசர்வ் வங்கி பரிசீலனை ?


ரவீந்திரநாத் தாகூர், அப்துல் கலாம் படங்களை ரூபாய் தாள்களில் அச்சிட ரிசர்வ் வங்கி பரிசீலனை ?
x

Image Courtesy : AFP 

தினத்தந்தி 5 Jun 2022 3:21 PM IST (Updated: 5 Jun 2022 4:04 PM IST)
t-max-icont-min-icon

ரிசர்வ் வங்கியின் அனைத்து ரூபாய் தாள்களிலும் மகாத்மா காந்தி அவர்களின் படம் இடம் பெற்றுள்ளது.

புதுடெல்லி,

இந்திய ரிசர்வ் வங்கி இனி புதிதாக அச்சிடவுள்ள ரூபாய் தாள்களில் ரவீந்திரநாத் தாகூர் மற்றும் ஏபிஜெ அப்துல் கலாம் ஆகியோரின் படங்களைப் பயன்படுத்துவது குறித்து பரிசீலனை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுவரை இந்திய ரிசர்வ் வங்கியின் அனைத்து மதிப்புள்ள ரூபாய் தாள்களிலும் மகாத்மா காந்தி அவர்களின் படம் இடம்பெற்றுள்ளது. இந்த நிலையில் ரிசர்வ் வங்கி மற்றும் செக்யூரிட்டி பிரிண்டிங் அண்ட் மிண்டிங் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (SPMCIL) ஆகியவை மகாத்மா காந்தி, ரவீந்திரநாத் தாகூர் மற்றும் ஏபிஜே அப்துல் கலாம் ஆகியோரின் இரண்டு செட் மாதிரிகளை ஐஐடி-டெல்லி எமரிட்டஸ் பேராசிரியர் திலிப் டி ஷஹானிக்கு அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஐஐடி-டெல்லி பேராசிரிரான திலீப் டி ஷஹானி இந்திய ரூபாய் நோட்டுகளில் வாட்டர்மார்க்ஸைத் தேர்ந்தெடுத்து, இறுதி ஒப்புதலுக்காக அரசாங்கத்திடம் சமர்ப்பிப்பவர் ஆவார். இதனால் மகாத்மா காந்தியின் படத்தோடு சேர்த்து ரவீந்திரநாத் தாகூர் , அப்துல் கலாம் ஆகியோரின் படங்கள் ரூபாய் நோட்டுகளில் அச்சிடப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.


Next Story