மக்களை அச்சுறுத்தும் வெறிநாய்கடி - தடுப்பூசியில் ஆர்வம் காட்டும் கேரள அரசு


மக்களை அச்சுறுத்தும் வெறிநாய்கடி - தடுப்பூசியில் ஆர்வம் காட்டும் கேரள அரசு
x

கேரளாவில் கால்நடை மருத்துவர்கள், பணியாளர்கள் என அனைவருக்கும் ரேபிஸ் தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கப்பட்டு உள்ளது.

கோழிக்கோடு,

கேரளாவில் வெறிநாய்க்கடி அதிகரித்திருப்பதால், தெரு நாய்களுக்கு தடுப்பூசி செலுத்துவதுடன், கருத்தடை அறுவை சிகிச்சை செய்யும் பணி தொடங்கப்பட்டு உள்ளது.

இதில் ஈடுபடும் நபர்களின் பாதுகாப்பை உணர்ந்து கால்நடை மருத்துவர்கள், ஆய்வாளர்கள், நாய்களை பிடிப்பவர்கள் என கால்நடை பணியாளர்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்தும் பணியை அம்மாநில சுகாதாரத்துறை செயல்படுத்தியுள்ளது.

தவனை முறையில் மூன்று முறை ரேபிஸ் தடுப்பூசி செலுத்தப்படும் என்றும், அதற்கான வழிகாட்டுதலை சுகாதாரத்துறை வெளியிட்டு உள்ளது.


Next Story